உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

4. பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி

கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டி யருள் வலிகுன்றிய ஓரரசன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தபோது, களப்பிரர் மரபைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அதனைக் கவர்ந்து கொண்டு அரசாளத் தொடங்கினன். அதனால், பாண்டியர் தொன்று தொட்டு ஆட்சி புரிந்து வந்த தம் நாட்டை இழந்து பெருமை குறைந்து பாண்டி நாட்டில் ஓரிடத்தில் ஒடுங்கி வதிந்து வருவா ராயினர். ஆகவே, அந்நாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டி ருந்த காலத்தில் அங்கு உயிர் வாழ்ந்துகொண்டிருந்த பாண்டியர் களைப் பற்றிய செய்திகள் இந்நாளில் தெரியவில்லை. சங்க நூல்களில் களப்பிரர் என்ற பெயர் காணப்படாமையானும் வராகமிகிரர் என்பார் தென்னாட்டவரின் வரிசையில் களப்பிரரைக் கூறாமையானும் அன்னோர் பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக்கொண்டு ஆதரித் துள்ளமையானும் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலார் ஆவர் என்பதும் நன்கு தெளியப்படும். எனவே, களப்பிரர் தென்னிந்தியாவினரே என்னும் சில ஆராய்ச்சியாளரின் கொள்கை பொருந்தாமை காண்க. அன்றியும், தமிழ் நாட்டுக் குறுநில குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்ற சோணாட்டூ ரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும்,

1. பல்லவர் வரலாறு, பக். 34.

2. Ibid, u. 38.

மன்னர்