உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இனி, பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணமும் கல்லாடமும்? கருநாட வேந்தன் ஒருவன் பாண்டி மண்டலத்தைக் கவர்ந்து அரசாண்டனன் என்றும், அவன் காலத்தில் சைவநெறி அழியவே, சமணசமயம் மிகச் செழித்த தென்றும், பின்னர் ஓர் இரவில் அவன் கொல்லப்பட்டான் என்றும் கூறுகின்றன. இவ்விருநூல்களும் கூறும் கருநாட வேந்தன் களப்பிரனாகத்தான் இருத்தல் வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

பிறமொழியாளரான களப்பிரரின் படையெடுப்பும் ஆளுகையும் பாண்டிநாட்டில் பலப்பல மாறுதல்களையும் புரட்சியையும் உண்டுபண்ணி, அவை என்றும் நின்று நிலவுமாறு செய்துவிட்டன. அரசாங்கமொழி, வேறொரு மொழியாகப் போய்விடவே, நம் தாய்மொழியாகிய தமிழ் ஆதரிப்பாரற்று வீழ்ச்சி எய்தியது. தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம், பிற சிறந்த பண்புகள் ஆகிய எல்லாம் சிதைந்தழிந்து போயின. தமிழ் நாட்டில் முன்னோர்களால் நிறுவப்பெற்று இடை யீடின்றி நடைபெற்று வந்த அறச்செயல்கள் பலவும் அழிக்கப்பட்டுப் போயின. பௌத்தம், சமணம் ஆகிய பிற சமயங்களும் பிறமொழியில் எழுதப்பெற்ற நூல்களும் அரசாங்கத்தின் பேராதரவு பெற்றுவிளங்கின. இக்களப்பிரரது படையெழுச்சி யினால் மதுரைமாநகரில் தமிழராய்ச்சி செய்துகொண்டிருந்த கடைச்சங்கமும் அழிந்துபோய் விட்ட டமை அறியத் தக்கது. களப்பிரர் ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளுள் இதனினுங் கொடியது வேறில்லை என்று கூறலாம். எனவே, இவர்களது ஆட்சிக்காலம் ஓர் இருண்டகாலமாகும்.

கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவன்

மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய்

யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்டேர் சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான் வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச் சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம்

சிந்திச் செருவென்று தன்னாணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான்'

2. படைநான் குடன்று பஞ்சவன் துரந்து

மதுரை வவ்விய கருநடர் வேந்தன்

அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப

(பெரிய. மூர்த்தி. 11,12)

(கல். 56)

ம்