உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

சுருக்கமாகக் கூறுகின்றன. இதனால் புகழும் இனிது புலப்படுதல் காண்க.

வனுடைய வீரமும்

னி, தென்மதுரையின்கண் விளங்கிய முதற் சங்கத்தைப் புரந்த பாண்டியருள் இறுதியிலிருந்தவன் கடுங்கோன் என்று இறையனாரகப் பொருளுரை உணர்த்துகின்றது. இவன் மிகப் பழையகாலத்தில் நிலவிய முதற் சங்கத்தைப் புரந்தவன்; களப்பிரரை வென்ற கடுங்கோன் கடைச்சங்கத் திறுதிக் காலத்திற்குச் சுமார் நானூறு ஆண்டுகட்குப் பின்னர் இருந்தவன். எனவே, கடுங்கோன் என்னும் பெயர்கொண்ட இவ்விருவரும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த வெவ்வேறு மன்னராவர். ஆகவே, பெயரொற்றுமை ஒன்றையே கண்டு இவ்விருவரையும் ஒருவர் என்று கூறுதல் உண்மையும் பொருத்தமும் உடையதன்று. மாறவர்மன் அவனி சூளாமணி

இவன் பாண்டியன் கடுங்கோனுடைய மகன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் கி.பி. 600 முதல் 625 வரை ஆட்சிபுரிந்த பாண்டியனாவன். இவன் காலத்தில் நிகழ்ந்த செய்திகளுள் ஒன்றும் புலப்படவில்லை. இவன் காலம்முதல் பாண்டியர்கள் 'மாறவர்மன்' 'சடைய வர்மன்' என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்து வருவாராயினர். மாறவர்மன் என்ற பட்டத்தை முதலிற் புனைந்து வாழ்ந்தவன் இவ்வேந்தனே யாவன்.

இவர்களைப் போல் சோழமன்னர்களும் 'இராசகேசரி' ‘பரகேசரி' என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து வந்தமை ஈண்டு அறியத்தக்கதாகும். செழியன் சேந்தன்

இவன், மாறவர்மன் அவனிசூளாமணியின் புதல்வன்; சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து கி. பி. 625 முதல் கி. பி. 640 வரையில் பாண்டிநாட்டில் அரசாண்டவன். இவனைச் 'சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்' எனவும், 'மண் மகளை மறுக்கடிந்த வேந்தர் வேந்தன்' எனவும், 'செங்கோற்

66

1. "கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும்

99

"கற்றறிந்தோர் திறல் பரவக்களப் பாழரைக் களைகட்ட மற்றிறடோண்மாக்கடுங்கோன்

99