உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

ஆகிய இம்மூவரும் சிவனடியார் அறுபத்து மூவருட் சேர்க்கப் பெற்றுள்ளனர். இவர்கள் வரலாற்றைப் பெரியபுராணத்திற்

காணலாம்.

இவ்வேந்தனது ஆட்சிக்காலத்திற் பாண்டிநாடு உயர் நிலையை அடைந்தது. இவன், சேரர்களையும், பரவரையும், குறுநிலமன்னர் சிலரையும் பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான இடங்களில் வென்றனன் என்றும், ஒரு பகலிற் சோழர்க்குரிய உறையூரைக் கைப்பற்றினனென்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. எனவே, இவன் முதலில் சோழ மன்னனை வென்று உறையூரைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு அவ்வளவன் வேண்டிக் கொண்ட வாறு அவன் மகளார் மங்கையர்க்கரசியாரை மணந்து பகைமை யொழித்து உறவும் நட்புங் காண்டிருத்தல் வேண்டும் என்பதும் உய்த் துணரக் கிடக்கின்றன. இவன் வென்றடக்கிய பரவர் என்பார், தென்றிசைக் கண்ணிருந்த குறுநிலமன்னர் ஆவர். 'தென்பரதவர் மிடல்சாய' என்னும் 378-ஆம் புறப்பாட்டடியாலும், 'தென்பரதவர் போரேறே' என்னும் மதுரைக் காஞ்சியடியாலும் கடைச்சங்ககாலத்திலும் பாண்டி நாட்டிற்குத் தெற்கே அன்னோர் இருந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. இவன் புரிந்த இப்போர்களை இறையனாரகப் பொருளுரையிலுள்ள மேற்கோட் பாடல்களும் எடுத்தியம்பு கின்றன. (பாடல்கள் 22, 106, 235, 309) சைவசமயாசாரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகளும் 'நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறனடியார்க்கும் அடியேன்' என்ற திருத் தொண்டத் தொகைப் பாடற் பகுதியில் நெல்வேலிப் போரில் இவன் வெற்றியெய்திய செய்தியைக் குறித்துள்ளார். எனவே, சேரர்களும் குறுநில மன்னர்களும் இவனுக்குத் திறைசெலுத்த, இவன் வேந்தர் வேந்தனாய்ச் சிறப்புற்று வாழ்ந்தவன் என்பது நன்கு புலப்படுகின்றது.

இவனது ஆளுகையின் தொடக்கத்தில்தான் சீனதேயத்தின னாகிய ‘யுவான்சுவாங்' என்பான் பாண்டிநாட்டிற்குச் சென்றனன். அவன் தன் வரலாற்றுக் குறிப்பில் 'பாண்டி நாட்டில் முத்தும் உப்பும் மிகுதியாகக் - கிடைக்கின்றன; பக்கத்துத் தீவுகளிற்