உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

35

கிடைக்கும் முத்துக்களும் இங்குக் கொண்டுவதப்படுகின்றன; இந்நாட்டில் வேறு விளை பொருள்கள் மிகுதியாக இல்லை. இங்கு வெப்பம் மிகுந்துள்ளது; இந்நாட்டு மக்கள் எல்லோரும் கறுத்த மேனியுடையவர்களாயும் உறுதியும் போர்வலிமையும் மிக்கவர்களாயும் இருக்கின்றனர்; இந்நாடு வணிகத்தால் வளம்பெற்றுச் செல்வத்தா ற் சிறந்துள்ளது' என்று பாண்டிநாட்டைப் பற்றித் தான் நேரில் அறிந்தவற்றை எழுதியுள்ளான். இதனால் மாறவர்மன் அரிகேசரியின் காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிற் பாண்டிநாடு எத்தகைய நிலையிலிருந்தது என்பதை ஒருவாறு உணரலாம்.

இவ்வேந்தன் இரணிய கர்ப்பதானமும் துலாபார தானமும் பலப்பல செய்து பெருமையுற்றனன் என்று வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. துலாபாரதானஞ் செய்தல் கடைச் சங்க காலத்திலும் வழக்கத்திலிருந்ததென்பது சிலப்பதி காரத்தால் அறியப்படுகிறது. (சிலப்பதிகாரம்-நீர்ப்படை, 173- 176) இவனைப் போலவே, கி. பி. பத்தாம் நூற்றாண்டினின் இறுதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்திற் பேரரசனாக வாழ்ந்த முதலாம் இராசராச சோழன் தன் மனைவியுடன் இரணிய கர்ப்பதானமும் துலாபாரதானமும் செய்தனன் என்று திருவிசலூர்க் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

இனி, கடைச்சங்க நாளில் விளங்கிய தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே இவனுடைய தந்தையாகிய செழியன்சேந்தன் எனவும், அந்நாளில் நிலவிய

லவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனே இவ்வரிகேசரி எனவும் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் வரைந்துள்ளார். இஃது ஒரு சிறிதும் உண்மையன்று. கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள் எல்லோரும் தூய தமிழ்ப் பெயரை உடையவர்கள்; சங்ககாலத் திற்குப் பின்னர் அவர்களது பாண்டி நாடு களப்பிரராற் கைப்பற்றப்பட்டது. களப்பிரரது ஆட்சி யொழிந்த பின்னர் அந்நாட்டின் அரசுரிமையை எய்தி ஆட்சிபுரிந்த இப்பாண்டியர் 1. Indian antiquary, vol XI.