உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

ருவரும் ‘சேந்தன்’, 'அரிகேசரி' என்ற வடமொழிப் பெயர்களை யுடையவர்கள்; அன்றியும் வடநாட்டு ஆரிய மன்னர்களைப் போல் 'வர்மன்' என்ற வடமொழிப் பட்டம் புனைந்து கொண்டவர்கள். சங்க காலத்துப் பாண்டி மன்னர்கள் இப்பட்டம் புனைந்து கொண்டவர்கள் அல்லர் என்பது பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு முதலான நூல்களைக் கற்றுணர்ந் தவர்கள் நன்கறிந்த தொன்றாம். சங்க காலத்துப் பாண்டியர்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் வாழ்ந்தவர்கள்; வடமொழிப் பெயர்களையும் பட்டங் களையும் உடையவர்களாகிய இப்பாண்டியர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவர்கள். எனவே, தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், இல வந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்போரும், செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி என்போரும் ஒன்றுக்கொன்று சேய்மையுற்ற வெவ்வேறு காலங்களில் விளங்கிய பாண்டி மன்னர்கள் என்பது நன்கு வெளியாதல் காண்க.

கோச்சடையன் ரணதீரன்

ல்

மாறவர்மன் அரிகேசரி என்பான் கி. பி. 670-ஆம் ஆண்டில் சிவபெருமான் திருவடிநீழல் எய்தவே, அவன் மகனாகிய கோச்சடையன் ரணதீரன் அரியணை ஏறினன். இவனைச் செங்கோற்றென்னன் எனவும், வானவன் எனவும், செம்பியன் எனவும், மதுர கருநாடகன் எனவும், கொங்கர் கோமான் எனவும், மன்னர்மன்னன் எனவும் வேள்விக்குடிச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. இச்சிறப்புப் பெயர்களை நோக்கு மிடத்து, இவ்வேந்தன் சேர நாட்டையும் சோழ நாட்டையும் கருநாட தேயத்தையும் கொங்கு நாட்டையும் கைப்பற்றித் தனக்குத் திறை செலுத்துமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றன. இவன் கடல்போன்ற பெரும் படையையுடைய ஆய்வேளை மருதூரில் போரில் வென்றனன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. ஆய்வேள் என்பான் பொதியின் மலைத் தலைவன் ஆவன். மருதூர் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் அம்பாசமுத்திரத் திற்கண்மையிலுள்ள திருப்புடை மருதூரா யிருத்தல் வேண்டும்