உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

37

என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அன்றியும், மங்கல புரத்தில் மாரதரைப் பொருதழித்த புகழுடையான் இம்மன்னன் என்பதும் வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அப்போரில் இவன்பால் தோல்வியுற்றோடியவன், மேலைச் சளுக்கிய அரசனாகிய முதல் விக்கிரமாதித்தனாய் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் திரு. துப்ரே என்பாரது முடிவு.' பேராசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரிகள், மங்கலபுரம் என்பது இப்போதுள்ள மங்களூரேயா மென்றும் அங்குத் தோற்றவன் கொங்கு நாட்டரசனா யிருத்தல் வேண்டும்' என்றும் கூறியுள்ளனர். மிகச் சேய்மையில் மேற்குத் தொடர்ச்சிமலைக்கு மேல்பாலுள்ள தென்கன்னடம் ஜில்லாவி லிருக்கும் மங்களூரில் கொங்கு மன்னனை இவன் போரில் வென்றான் என்று கூறுவது பொருந்தவில்லை. அன்றியும், நம் கோச்சடையன், ரணதீரன் என்ற சிறப்புப்பெயர் பெற்றமைக்குக் காரணம், ரணரசிகன் என்ற சளுக்கிய விக்கிரமாதித்தனைப் போரிற் புறங்கண்டமை யேயாகும். மங்கலபுரம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் கொள்ளிடத்திற்கு வடகரையிலுள்ள மங்கலம் என்னும் ஊராதல் வேண்டும். ஆகவே, மேலைச்சளுக்கிய வேந்தனாகிய முதல் விக்கிரமாதித்தனையே கி. பி. 674 -ஆம் ஆண்டில் இவன் மங்கலபுரத்தில் போரில் வென்றனன் என்று கொள்ளுவது தான் மிகப் பொருத்தமுடையது. அவ் விக்கிரதமாதித்தன், பாண்டி வேந்தனோடு போர்புரிந்த செய்தி, அவனுடைய கேந்தூர்க் கல்வெட்டுக்களாலும் உறுதி யெய்துகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் சைவசமய குரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயனாருடன் மதுரைக்கு வந்து இம் மன்னனாலும் இவன் மகளை மணந்து ம் மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனாலும் உபசரிக்கப் பெற்றுத் திருவாலவாயிறைவரையும் திருப்பரங்குன்றப் பெருமானையும் வழிபட்டனர்."ஒப்பற்ற பெரு வீரனாக நிலவிய இவ்வரசன் கி. பி. 710 -ஆம் ஆண்டில் விண்ணுல கடைந்தான்.

1. The Pallavas P.68.

2. The Pandyan Kingdom, pp.55 and 56.

3. Epigraphia Indica, Vol. IX; No. 29.

4. பெரிய புராணம், கழறிற்றறிவார், 91-2.

3

சுந்தரர் தேவாரம், திருப்பரங்குன்றப் பதிகம், பாட்டு 11.