உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

அரிகேசரி பராங்குச மாறவர்மன்

இவன் கோச்சடையனுடைய புதல்வன் ஆவன். இவன் தன் பாட்டன் பெயராகிய அரிகேசரி என்ற பெயருடையவன்; மாறவர்மன் என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன். இவனை முதலாம் இராசசிம்மன் எனவும் தேர்மாறன் எனவும் வழங்குவ துண்டு. வன் கி. பி. 710 முதல் 765 வரை ஆட்சி புரிந்தவன். இவன் காலத்தில் சோணாடு பல்லவர்களது ஆட்சிக்கு உட் பட்டிருந்தது. அந்நாளில் தொண்டை மண்டலத்திற்கும் சோழ மண்டலத்திற்கும் அரசனாக வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவன் நந்திவர்மப் பல்லவமன்னன் என்பான். மாறவர்மனுக்கும் அப் பல்லவமன்னனுக்கும் பல போர்கள் நிகழ்ந்தன. குழும்பூர், நெடுவயல், குறுமடை, மன்னிக்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொடும்பாளூர், பெரியலூர் என்னும் ஊர்களில் நடைபெற்ற போர்களில் இவன் பல்லவ மன்னனையும் அவனுடைய படைத்தலைவர்களையும் தோல்வியுறச் செய்தனன் என்று தெரிகின்றது. இவ்வூர்களுட் பல, புதுக்கோட்டை இராச்சியத்தில் உள்ளன. எனவே, பல்லவர்கள் பாண்டி நாட்டையும் கைப்பற்று வதற்குத் தெற்கே பெரும்படையுடன் செல்ல, அதனையுணர்ந்த இப் பாண்டியன் பகைஞர்களைப் பாண்டி நாட்டின் வட எல்லையிலே தோற்றோடச் செய்தனன் போலும்.

நென்மேலி, மண்ணை முதலிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பாண்டியனைப் பல்லவமன்னன் வென்றனன் என்று திருமங்கையாழ்வார், கச்சிப் பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திற் கூறியிருக்கின்றனர். அச்செய்தி, நந்திவர்மப் பல்லவமல்லனது உதயேந்திரச் செப்பேடுகளிலும் சொல்லப் பட்டுள்ளது.1 ஆகவே சில இடங்களிற் பல்லவர்களும்

வெற்றியடைந்திருக்கலாம்.

இவன் மழ கொங்குநாட்டைக் கைப்பற்றி அந்நாட்டு மன்னன் தனக்குக் கப்பஞ் செலுத்திவருமாறு செய்தனன் என்றும், கங்க அரசன் மகள் பூசுந்தரியை மணந்து கொண்டனன் என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.

1. South Indian Inscriptions vol II, No. 74.