உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

39

இவன் கொங்குநாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற போது திருப்பாண்டிக் கொடுமுடி என்னுந் திருப்பதிக்குப் போய் அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்கிப் பொற்குவியலும் நவமணித்திரளும் மனமகிழ்ந்து கொடுத்தனன் என்பது வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. இதனால் இவனது சிவபக்தியின் மாட்சி ஒருவாறு விளங்கும். இவன் தன் பாட்டனைப் போல் இரணியகர்ப்பதானங்களும் துலாபாரதானங்களும் செய்து புகழெய்தியவன். இறையனாரகப் பொருளுரை மேற்கோட் பாடல்களும் இவன் பெருமையையும் வீரத்தையும் நன்கு புலப்படுத்தா நிற்கும்.

நெடுஞ்சடையன் பராந்தகன்

இவன் அரிகேசரி பாராங்குச மாறவர்மனுக்குக் கங்க அரசன் மகள் பூசுந்தரிபால் பிறந்த புதல்வன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டம் புனைந்து கி. பி. 765 முதல் கி. பி. 790 வரையில் ஆட்சிபுரிந்தவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளாதல் கல் வெட்டுக்களாதல் யாண்டும் கிடைக்கவில்லை. ஆகவே, இதுகாறும் கிடைத்துள்ளவற்றுள், இவ் வேந்தனுடைய செப்பேடு களும் கல்வெட்டுக்களும் மிக்க பழமை வாய்ந்தவையாகும். அவை, இலண்டன் பிரிட்டிஷ் பொருட்காட்சிச்சாலையிலுள்ள வேள்விக்குடிச் செப்பேடுகளும்' சென்னைப் பொருட் காட்சிச் சாலையிலுள்ள சீவரமங்கலச் செப்பேடுகளும்? ஆனைமலைக் கல்வெட்டுகளும், திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டுக்களுமேயாம். இவ்விரு செப்பேடுகளும் கிடைக்காமற் போயிருப்பின், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு பாண்டி

1. இப்பராந்தகன் தன் முன்னோனான பல்யாகமுது குடுமிப் பெருவழுதி என்னும் அரசன் கொற்கைகிழான் நற் கொற்றனுக்கு வழங்கிய வேள்விக்குடியென்ற ஊரைக் களப்பிரர் தம் ஆட்சியிற் கவர்ந்துகொள்ளவே, அக் கொற்கை கிழான் வழியிற் றோன்றிய நற்சிங்கன் என்பான் தன் உரிமையை யெடுத்துரைத்து வேண்டிக் கொண்ட வாறு அவ்வூரை இவ் வேந்தன் அவனுக்கு மறுபடியும் வழங்கியதை யுணர்த்துவனவே வேள்விக்குடிச் செப்பேடுகளாம்.

2. இவ்வேந்தன் தென்களவழிநாட்டு வேலங்குடி யென்ற வூரைச் சீவரமங்கலமென்று தன் பெயராற் பிரமதேயமாக வழங்கியதைக் கூறுவனவே சீவரமங்கலச் செப்பேடுகளாம்.