உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

1

41

இவனுடைய சீவரமங்கலச் செப்பேடுகள், வெள்ளூர், விண்ணம், செழியக்குடி என்ற ஊர்களில் இவன்தன் பகைஞர்களை வென்றழித்தனன் என்றும், காவிரியாற்றின் வடகரையிலுள்ள ஆயிரவேலியயிரூர், புகழியூர் என்ற இடங்களில் அதியமானைப் போரிற் புறங்கண்டனன் என்றும், அவனுக்கு உதவிபுரியும் பொருட்டுக் குடபாலும் குணபாலும் பெரும் படைகளுடன் வந்து போர்புரிந்த போர்புரிந்த சேரனையும் சேரனையும் பல்லவனையும் தன் வேற்படையால் வென்று துரத்தினன் என்றும், தோல்வி யெய்திய கொங்கர் கோமானைக் களிற்றொடும் பிடித்துக் கொணர்ந்து மதுரைமா நகரில் சிறையில் வைத்து, அவனுக் கு ரிய கொங்கு நாட்டைத் தன்னடிப்படுத்தினன் என்றும்; இலங்கையைப் போல் அரணாற் சிறந்து விளங்கிய விழிஞத்தை அழித்து வேணாட்டரசனை வென்று அவனுடைய களிறும் மாவும் பெருநிதியும் கவர்ந்துகொண்டு நாட்டையும் கைப்பற்றினன் என்றும் கூறுகின்றன. வெள்ளூர் முதலான மூன்றூர்களிலும் இவனோடு பொருது தோல்வியுற்ற பகைஞர் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. இவன் போரிற் புறங்கண்ட அதியமான் என்பான், சேலம் ஜில்லாவில் இந்நாளில் தர்மபுரி என்று வழங்கும் தகடூரிலிருந்து' கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தவனும் கடையெழுவள்ளல்களு ள் ஒருவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சியின் வழியில் தோன்றி, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்நாட்டை யாண்டு கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்; தன் நாட்டை இழந்து மதுரையில் சிறையிலிருந்த கொங்குமன்னனும் அவ்வதியமானே என்பதில் ஐயமில்லை.' நம் நெடுஞ்சடையன் பராந்தகன் பேராற்றல் படைத்த பெரு வேந்தனாய்த் தன் பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி உயர்நிலைக்குக் கொணர்வதைக் கண்ட சேரனும் பல்லவனும் பெரிதும் அச்சமுற்று, இவன் செய்கையைத் தடைசெய்ய

1. Indian Antiquary, Vol. XXII. pp. 69-75.

2. South Indian Inscriptions, Vol VII. Nos. 553 and 534.

3. கொங்கு மன்னனும் அதியமானும் வெவ்வேறு அரசர் ஆவர் என்று பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரிகள் கூறுவது பொருத்தமுடையதன்று. (The Pandyan Kingdom, p. 62)