உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

43

கோயில் எடுப்பித்தானென்று அச் செப்பேடுகள் உணர்த்து வதும் ஈண்டு அறியத்தக்கது. அன்றியும், இவனுடைய வேள்விக் குடிச் செப்பேடுகளின் இறுதியில் வைணவ தர்ம சுலோகங்கள் வரையப்பெற்றிருத்தல், இவன் அச் சமயத்தின்பால் வைத்திருந்த பெரும் பற்றினைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் எனலாம்.

இவனுடைய செப்பேடுகளில் இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய பல சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை தென்னவானவன், சீவரன், சீமனோகரன், சினச்சோழன், புனப் பூழியன், வீதகன்மஷன், விநயவிச்ருதன், விக்கிரம பாரகன் வீரபுரோகன், மருத்பலன், மானிய சாசனன், மநூபமன், மர்த்தித வீரன், கிரிஸ்திரன், கீதகின்னரன், கிருபாலயன், கிருதாபதானன், கலிப்பகை, கண்டக நிஷ்டூரன், கார்ய தக்ஷிணன், கார்முக பார்த்தன், பண்டித வத்சலன், பரிபூர்ணன், பாபபீரு, குணக் ராகியன், கூடநிர்ணயன் என்பனவாம், இவற்றுள் மூன்றொழிய, எஞ்சியனவெல்லாம் வடமொழிப் பெயர்கள் ஆகும். தூய தமிழ்ப் பெயர்களையும் பட்டங்களையும் உடையவர்களாக வாழ்ந்துவந்த பாண்டி மன்னர்கள் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இத்தகைய பட்டங்களைப் பெரு விருப்புடன் புனைந்து கொண்டமை பெரியதோர் வியப்பேயாம்.

இவ்வேந்தன் காலத்திருந்த அரசியல் தலைவர் சிலர், இவன் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் குறிக்கப் பெற்றுள்ளனர். அன்னோர் மாறன்காரி, மாறன் எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தஞ்சாத்தன், தீரதரன் மூர்த்தி எயினன், சங்கரன், சீதரன் என்போர். அவர்களைப்பற்றிய செய்திகளையும் ஈண்டு ஆராய்ந்து காண்போம்.

1. மாறன்காரி

இவன் திருநெல்வேலித் தாலுகாவில் இந்நாளில் உக்கிரன் கோட்டை என்று வழங்கும் கரவந்தபுரமாகிய களக்குடியில் மாறன் என்பவனுக்குப் புதல்வனாகத் தோன்றியவன்; காரி என்ற இயற்பெயருடையவன்; வைத்தியகுலத்தினன்; மதுரகவி என்னுஞ் சிறப்புப் பெயருடையவன். நெடுஞ்சடையன் பராந்தகன் ஆட்சியின் முற்பகுதியில் முதல் அமைச்சனாக