உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 நிலவியவன். வன் மதுரைக்கு வடகிழக்கே ஆறு மைல் தூரத்திலுள்ள ஆனைமலையில் திருமாலுக்கு ஒரு கற்றளி அமைத்து, அதில் நரசிங்கப் பெருமாளை, கி. பி. 770-ஆம் ஆண்டில் எழுந்தருளுவித்தான். அன்றியும் அக்கோயிற் கண்மையில் அந்தணர்க்கு ஓர் அக்கிரகாரம் அளித்துள்ளனன். இந் நிகழ்ச்சிகளை நோக்குமிடத்து இவன் வைணவ சமயப்பற்று மிகுதியாயுடையவன் என்று தெரிகிறது. இவன் பாண்டி வேந்தனால் வழங்கப்பெற்ற மூவேந்தமங்கலப் பேரரையன் என்ற பட்டம் பெற்றவன் ஆவன். வேள்விக்குடிச் செப்பேடு களில் இவனே ஆணத்தியாகக் கூறப்பெற்றுள்ளான்.

2. மாறன் எயினன்

இவன் மாறன் காரிக்குத் தம்பியாவன்; எயினன் என்னும் இயற்பெயருடையவன்; அக்காரி இறந்த பின்னர்ப் பராந்தகனுக்கு முதல் அமைச்சனாக இருந்தவன்; அரசனால் அளிக்கப்பெற்ற பாண்டி மங்கல விசையரையன் என்னும் பட்டம் எய்தியவன். இவன் தன் தமையன் ஆனைமலையில் எடுப்பித்த நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு முகமண்டபம் ஒன்றமைத்துக் கடவுண் மங்கலஞ் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.* இவன் தமையன் அமைச்சனாயிருந்த நாட்களில் எடுப்பிக்கப்பெற்ற அக் கோயிலுக்குக் கடவுண் மங்கலஞ் செய்யாமல் அவன் இறந்த செய்தியை ஆனைமலைக் கல்வெட்டால் அறியலாம்.

3. சாத்தன் கணபதி

இவன் கரவந்தபுரத்தில் வாழ்ந்த சாத்தன் என்பவனுடை மகன்; வைத்திய குலத்தினன்; கணபதி என்னும் இயற் பெயருடையவன்; பராந்தக பாண்டியனது ஆட்சியின் முற் பகுதியில் எல்லாப் படைகட்கும் மாசாமந்தனாக விளங்கியவன்; இவ்வேந்தனால் வழங்கப் பெற்ற பாண்டி அமிர்தமங்கல வரையன் என்னும் பட்டமுடையவன். இவன் திருப்பரங்குன்றத்திலுள்ள

1. Ep. Ind., Vol. VIII, pp. 319 and 320. இவ் வானைமலைக் கல்வெட்டில் கலியுகம் ஆண்டு 3871 என்று குறிக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. பாண்டியர் கல்வெட்டுக் களில் இதுகாறும் கிடைத்துள்ளவற்றுள், இதுவே ஆண்டு வரையப்பெற்ற பழமையான கல்வெட்டாகும்.

2. Ibid, p. 320.