உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

45

கோயிலுக்குத் திருப்பணி புரிந்து அங்குள்ள திருக்குளத்தையும் திருத்தி அறச் செயல்களையும் ஒழுங்குபடுத்தினான் என்று அவ்வூரிலுள்ள பராந்தகனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட் டொன்று உணர்த்துகின்றது. அன்றியும், இவனுடைய மனைவி நக்கன்கொற்றி என்பாள் அவ்வூரில் துர்க்கைக்கும் சேட்டைக்கும் வெவ்வேறு கோயில் அமைத்தனள் என்பது அக் கல்வெட்டின் பிற்பகுதியால் அறியப்படுகின்றது.

4. ஏனாதி சாத்தஞ்சாத்தன்

இவன் சாத்தன் கணபதியின் உடன்பிறந்தான் ஆவன்; வேள்விக்குடிச் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியைப் பாடியவன்; ஏனாதி என்னும் பட்டம் பெற்றவன். ஆகவே, இவன் மாசா மந்தனுக்குக்கீழ் ஒரு படைக்குத் தலைவனாயிருந்திருத்தல் வேண்டும், பெருவீரனான இத்தலைவன் தமிழ்ப் புலமையுடை யவனாகவுமிருந்து பாண்டி வேந்தர் பலருடைய வரலாறுகளைப் பாடி அச் செப்பேடுகளில் சேர்த்த பெருமை வாய்ந்தவன். எனவே, அறம்புரிந்த அரசனுடைய முன்னோர்கள் வரலாற்றைச் செப்பேடுகளில் வரைந்துவைக்கும் வழக்கத்தைப் பாண்டி நாட்டில் முதலில் தோற்றுவித்தவன் இவனேயாவன்.

5. தீரதரன்மூர்த்தி எயினன்

இவன் பராந்தகனது 17-ஆம் ஆட்சி யாண்டில் வெளியிடப்பெற்ற சீவரமங்கலச் செப்பேடுகளில் ஆணத்தியாகக் குறிக்கப்பெற்றவன். இவ்வேந்தன் ஆட்சியின் பிற்பகுதியில் பாண்டிப்படைகட்கு மாசாமந்தனாக நிலவியவன். அரசனால் அளிக்கப்பெற்ற வீரமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் எய்தியவன். வனைப் பற்றிய பிற செய்திகள் புலப்பட

வில்லை.

6. சங்கரன் சீதரன்

இவன் பாண்டி நாட்டுக் கொழுவூரின்கண் பிறந்தவன்; பராந்தகனது யானைப் படைக்குத் தலைவன்; பாண்டியனால்

1. Indian Antiquary, Vol, XXII. p. 67.

2. Ibid, pp. 69-75.