உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

வழங்கப்பெற்ற பாண்டி இளங்கோமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் உடையவன்.

1

இரண்டாம் இராசசிம்ம பாண்டி

இவன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய புதல்வன்; சின்னமனூர்ச் செப்பேடுகள் இவன் பெயரை மாத்திரங் கூறுகின்றனவேயன்றி இவனைப்பற்றிய செய்திகளை உணர்த்த வில்லை. எனவே, இவன் ஆட்சிக்காலம் மிகச் சுருக்கமாய் இருந்திருத்தல் வேண்டும்; அன்றியும், இவன் காலத்தில் வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லாமலும் இருக்கலாம். இவன் கி. பி. 790 முதல் 792 வரை இரண்டாண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் உணரக் கிடக்கின்றது. இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன். வரகுண மகாராசன்

இவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியனுடைய மகனாவன்; சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தவன். இவனைக் "கொற்றவர்கள் தொழு கழற்காற் கோவரகுண மகாராசன்" என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அதன் உண்மையை ஈண்டு ஆராய்வோம்.

வரகுண மகாராசனது ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் சோழநாட்டிலுள்ள திருவியலூர்," திருநெய்த் தானம்' என்னும் ஊர்களிலும் ஆறு, எட்டு, பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் முறையே ஆடுதுறை, கும்பகோணம்,5 செந்தலை, ஆகிய ஊர்களிலும் பதினொன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி, திருக்கோடிகா° என்ற

1. Ibid.

2. Ins. 17 of 1907.

3. S. I. I., Vol. V.No.608.

4. Ins. 364 of 1907.

5. Ins. 13 of 1908.

6. S. I. I. Vol, VI. No. 446.

4

7. Annual Report on Archaeological Survey of India for 1903-04. page 275.

8. Ins. 37 of 1931.