உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

47

ஊர்களிலும் ஆண்டழிந்துபோன கல்வெட்டொன்று திருச் சோற்றுத்துறை யிலும் இருத்தலால் சோழமண்டலம் முழுவதும் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது நன்கு புலனாகின்றது. இம்மன்னன் பல்லவ வேந்தனைக் கருவூரில் வென்றிகொண்ட செய்தி பராந்தக பாண்டியனுடைய ஏழாவது ஆண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகளினால் அறியப்படுகின்றது' அன்றியும், கி.பி. 795 முதல் 846 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் கல்வெட்டுக்கள் சோழ மண்டலத்தில் காணப்படவில்லை. எனவே, அப்பல்லவ அரசனது ஆட்சியில் தான் வரகுண மகாராசன் சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைத் தன் ஆளுகைக் குள்ளாக்கி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

திருச்சிராப்பள்ளியிலுள்ள இவனது பதினோராம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று இவன் வேம்பில் மதிலையழித்து நியமத்தில் தங்கியிருந்தபோது சிராப்பள்ளி இறைவற்குத் திருவிளக்குகள் எரிப்பதற்கு நிவந்தமாக 125 கழஞ்சு பொன் அளித்தனன் என்று கூறுவதால் இவன் சோணாட்டின் மீது

சு

யெடுத்து வந்து அதனைக் கைப்பற்றிய செய்தி உறுதியாதல் காண்க. வேம்பிலும் நியமமும் சோழநாட்டூர் களாகும். அவற்றுள், வேம்பில் என்பது இந்நாளில் வேப்பத்தூர் என்று வழங்குகிறது.

இனி, இவ் வேந்தனது பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள அம்பாச முத்திரத்தி லிருக்கின்றது. அதில் இம் மன்னன் தொண்டை மண்டலத்தில் பெண்ணை யாற்றங்கரையிலுள்ள அரசூரில் வீற்றிருந்தபோது அம்பாசமுத்திரத்துக் கோயிலுக்கு 290 பொற்காசுகள் நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக வழங்கிய செய்தி சொல்லப்பட்டுள்ளது.* எனவே, தொண்டை மண்டலத்தின் தென் பகுதியும் வனது ஆளுகைக்குட்

1. Ins. 160 of 1931.

66

2. 'காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த

கூடலர்கோன் ஸ்ரீவரகுணன்.

99

3. Ep. Ind. Vol. IX. No. 10. (Ins. 105 of 1905.)