உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 பட்டிருந்தது என்பது நன்கு வெளியாகின்றது. இவன் காலத்தி லிருந்த பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் என்பான் சோழ மண்டலத்தையும் தொண்டை மண்டலத்தின் தென்பகுதியையும் இழந்து, எஞ்சிய பகுதியையே ஆண்டுவந்தவனாதல் வேண்டும். ஆகவே, சோழ மண்டலத்தையும் தொண்டைமண்டலத்தையும் பாண்டி மண்டலத்தோடு சேர்த்து ஒருங்கே ஆட்சி புரிந்த பெருமை யுடையவன் வரகுண மகாராஜன் என்பது இனிது புலப்படுதல் காண்க.

இனி, இவ்வரசர் பெருமானது சிவபக்தியின் மாண்பு இத்தகையது என்று அளவிட்டுரைக்குந் தரத்ததன்று. இவன் ஆட்சிக் காலத்திற்றான் திருவாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருமான் இருந்தனர் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுகிறது. இவ்வடிகள் தாம் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக்கோவை யாரில் இவ் வேந்தனை இரண்டு பாடல்களில் பாராட்டி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை,

66

66

மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே றன்னவன் தேர்புறத் தகல்செல் லாது வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத் தான்மற்றைத்

(தேவர்க்கெல்லா

முன்னவன் மூவலன் னாளுமற் றோர்தெய்வம்

முனலைளே” (306)

புயலோங் கலர்சடை யேற்றவன் சிற்றம் பலம்புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங்

செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர்

காட்டிவருஞ்

(திருமுகமே" - 327)

என்பனவாம்.

அன்றியும், ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வராகிய பட்டினத்தடிகள் தாம் பாடிய திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் ஒரு பாடலில் இவன் சிவபக்தியின் மேலீட்டால் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகளெல்லா வற்றையும் எடுத்துக் கூறியுள்ளனர். அவை,