உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

66

என்பன.

வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ஓடும் பன்னரி யூளைகேட் டரனைப் பாடின வென்று படாம்பல வளித்தும் குவளைப் புனலிற் றவளை யரற்ற ஈசன் றன்னை யேத்தின வென்று காசும் பொன்னுங் கலந்து தூவியும் வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல வெம்மித் தலையுங் கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங் கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்று நாய்க் கட்ட மெடுத்துங் காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும்'

49

கி. பி. பத்தாம் நூற்றாண்டில் நம் தமிழகத்தில் வாழ்ந்த வரும் சைவத் திருமுறைகளைத் தொகுத்தவருமாகிய நம்பி யாண்டார் நம்பி என்னும் பெரியார் தாம் கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்

பாடிய

பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லார் அடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்றன் முடியே தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே'

என்று இவன் சிவபெருமான்பால் வைத்திருந்த பேரன்பினைப் புகழ்ந்து கூறியுள்ளார். இதனாலும் இவன் சிவபக்தியின் மாட்சியை நன்குணரலாம்.