உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -2

3

திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள அம்பாசமுத்திரம்' தளபதி சமுத்திரம்,2 கழுகுமலை, ஏர்வாடி,"என்ற ஊர்களில் இவனது ஆட்சியின் 39, 41, 42,43-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. எனவே, இவன் நாற்பத்துமூன்று ஆண்டு ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, கி.பி. 792ல் முடிசூடிய இவ் வேந்தன் கி. பி. 835-ஆம் ஆண்டில் இறைவன் திருவடியை எய்தியிருத்தல் வேண்டும்; இவனை முதல் வரகுண பாண்டியன் என்று வரலாற்றாராய்ச்சியாளர் கூறுவர்.

இனி, நெடுஞ்சடையன் பராந்தகனும் இவ் வரகுண மகாராசனும் ஒருவனாயிருத்தல் வேண்டும் என்பது சில அறிஞர்களது கொள்கை'. அஃது எவ்வாற்றானும் பொருந்துவ தன்று. நெடுஞ்சடையன் பராந்தகன் பரம வைணவன் என்பது அவனுடைய வேள்விக்குடிச் செப்பேடுகளாலும் சீவர மங்கலச் செப்பேடுகளாலும் உறுதி யெய்துகின்றது. வரகுண மகாராசன் பரம சைவன் என்பது திருச்சிராப்பள்ளி, அம்பாசமுத்திரம் முதலான ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களாலும் மணிவாசகப் பெருமான், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய சைவப் பெரியோர்களின் அருட்பாடல்களாலும் நன்கு அறியப் படுகின்றது.

நெடுஞ்சடையன் பராந்தகனுடைய சிறப்புப் பெயர்கள் பலவற்றையும் எடுத்துரைக்கும் அவனுடைய செப்பேடுகள் வரகுணன் என்ற பெயரையே யாண்டும் கூறவில்லை. வரகுண பாண்டியன் கல்வெட்டுக்களில் நெடுஞ்சடையன் பராந்தகனுக்கு வழங்கிய பல சிறப்புப் பெயர்களுள் ஒன்றாவது காணப்பட வில்லை. இந்நிலையில் இவ்விரு வேந்தரும் ஒருவனாதல் எங்ஙனம்?

வரகுண மகாராசனுடைய பேரன்மார் இருவரும் வரகுணன், பராந்தகன் என்ற பெயர்களையுடையவர் களாயிருத்தல் உண்மையே.

1. Ins. 104 of 1905.

2. Ins. 12 of 1928-29.

3. Ins. 863 of 1917.

4. Ins. 605 of 1915.

5. The Pandyan Kingdom, pp. 40 and 41.