உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 போரில் இவன் சேரனை வென்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். விழிஞத்துப் போரில் சேரமன்னன் தோல்வியுற்று உயிரிழந்திருத்தல் வேண்டுமென்பது 'விண்ணாள வில்லவற்கு

விழிஞத்து விடைகொடுத்தும்' என்ற தளவாய்புரச்

செப்பேட்டுப் பகுதியால் அறியக் கிடக்கின்றது, சேர மன்னன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. குண்ணூரில் இவன் யாரோடு போர்புரிந்தான் என்பதும் தெரியவில்லை.

ஈழநாட்டில் முதல்சேனன் (கி. பி. 822-842) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் இப் பாண்டி வேந்தன் அந்நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று, பல நகரங்களைக் கொள்ளை யிட்டு, புத்த விகாரங்களிலிருந்த பொற்படிமங்களையும் விலையுயர்ந்த பிறபொருள்களையும் கைப்பற்றி வந்தனன் என்றும் அதனால் சிங்களதேயம் தன் செல்வமெல்லாம் இழந்து சிறுமையுற்றதென்றும் மகாவம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகின்றது. அந் நாட்களில், சிங்கள மன்னன் பேராற்றல் படைத்த பாண்டிப் படையோடு போர்புரிய முடியாமல் தன் நாட்டைவிட்டு மலேயாவிற்கு ஓடிவிட்டான் என்றும் இளவரசனாகிய மகிந்தன் உயிர் துறந்தான் என்றும் காசபன் என்பான் போர்க்களத்தை விட்டோடிப் போயினான் என்றும் தெரிகின்றன. பிறகு, இவன் தன்னைப் பணிந்து உடன்படிக்கை செய்துகொண்ட முதல் சேனனுக்கு அந்நாட்டை வழங்கினான். ஆகவே, சீவல்லபன் சிங்களத்தை வென்றா னென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் உணர்த்துவது உண்மையாதல் காண்க.' இச்செய்தி இவன் புதல்வன் பராந்தக பாண்டியன் வெளியிட்ட செப்பேடுகளாலும் உறுதி யெய்துகின்றது.

1

முதல் சேனனுக்குப் பின்னர் ஈழநாட்டில் முடிசூடிய இரண்டாம் சேனன் என்பான் (842-877) சீவல்லபனுக்குத் தாயத்தினன் என்று கூறிக்கொண்டு இவனோடு முரண்பட் டிருந்த மாய பாண்டியனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாண்டி நாட்டின் மேல் படையெடுத்து வந்தான். நம் சீவல்லபன் அன்னோர் இருவரையும் ஒருங்கே போரிற்

1. The Pandyan Kingdom. p. 69.

2. "குரைகடலீழங் கொண்டும்”