உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

53

புறங்கண்டு பாண்டி நாட்டைவிட்டு ஓடுமாறு செய்தனன். இப்போர் நிகழ்ச்சியைப் பற்றி மகாவம்சம் கூறுவன எல்லாம் வெறும் புனைந்துரை களேயன்றி உண்மைச் செய்திகள் ஆகமாட்டா. எனவே, சிங்கள மன்னனுடைய பாண்டி நாட்டுப் படையெடுப்பில் வெற்றி பெற்றவன் சீவல்லபனே என்பது தேற்றம்.

னி, இவ் வேந்தன் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த போர் களுள் இவன் பல்லவருடன் நடத்திய போர்கள் நான்காகும். அவை, ஆனூர்ப் போர், தெள்ளாற்றுப் போர், குடமூக்குப் போர், அரிசிற்கரைப் போர் என்பன. அவற்றுள் தெள்ளாற்றுப் போர் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த தொண்டை மண்டலத்தின் தென்பகுதியைக் கைப்பற்றும் பொருட்டுப் பல்லவ வேந்தனாகிய மூன்றாம் நந்திவர்மன் என்பான் சீவல்லபனோடு கி. பி. 854-ஆம் ஆண்டில் நடத்திய போராகும். இப் போரில் நந்திவர்மன் வெற்றி எய்தினன் என்பது அவன் 'தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன்' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும், திருச்சிராப்பள்ளி ஜில்லா சென்னி வாய்க்காலிலுள்ள கல்வெட்டொன்று' 'தெள்ளாற்றெறிந்து ராஜ்யமுங் கொண்ட நந்திபோத்ரையர்' என்று கூறுவதால், அவன் தன் தந்தை பாண்டியரிடம் இழந்த தொண்டைமண்டலத்தின் தென்பகுதியைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது புலனா கின்றது. ஆகவே, தெள்ளாற்றுப் போரில் தோல்வியுற்ற சீவல்லபன் தொண்டைநாட்டில் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியை இழந்து விட்டமை தெள்ளிது. பல்லவ வேந்தனுக்கும் ஸ்ரீமாறனுக்கும் ஆனூர் என்னுமிடத்தில் போர் நிகழ்ந்த தென்றும். அதில் பல்லவ வேந்தன் தோல்வியுற்றான் என்றும் தளவாய்புரச் செப்பேடுகள் கூறுகின்றன.3

சில ஆண்டுகட்குப் பிறகு குடமூக்குப் போர் நிகழ்ந்தது. குடமூக்கு என்பது இந்நாளில் கும்பகோணம் என்று வழங்கும்

1.

தெள்ளாறு என்பது வட ஆர்க்காடு ஜில்லா வந்தவாசித் தாலூகாவில் உள்ளதோர் ஊராகும். 2.S. I. I., Vol., XII. D. No. 56.

3. "காடவருக் கடலானூர்ப் பீடழியப் பின்னின்றும்”