உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

நகரமாகும். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சைவசமய குரவர்கள் திருப்பாடல்களும் அந் நகரைக் குடமூக்கு என்றே கூறுகின்றன. சீவல்லபன் தெள்ளாற் றெறிந்த நந்திவர்மனையும் அவனுக்கு உதவி புரியவந்த கங்கர், சோழர், காலிங்கர், மகாதர் ஆகியோரையும் குடமூக்குப் போரில் புறங்காட்டி ஓடும்படி செய்து தன் பெருஞ்சினத்தை ஒருவாறு தணித்துக்கொண்டான். பாண்டி வேந்தன் இப் போரில் வெற்றிப்பெற்ற செய்தி, தெள்ளாற் றெறிந்த நந்திவர்மன் மகனாகிய நிருபதுங்கவர்மனுடைய வாகூர்ச் செப்பேடுகளிலும், இவன் இரண்டாவது புதல்வன் பராந்தக பாண்டியன் வெளியிட்ட தளவாய்புரச் செப்பேடு களிலும்' சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிக்கப்பெற்ற அமர்வல்லான் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை.

பிறகு, இவனது ஆட்சியின் இறுதிக்காலத்தேதான் அரிசிற்கரைப்போர் நடைபெற்றது. இப்போர், கும்பகோணத் திற்குத் தென்புறமாக ஓடிக் காரைக்காலுக்கு அண்மையில் கடலில் கலக்கும் அரிசிலாற்றின் கரையில் ஓர் இடத்தில் நம் சீவல்லபனுக்கும் பல்லவ அரசனாகிய நிருபதுங்கவர்மனுக்கும் நிகழ்ந்ததாகும். இதில் சொல்லப்பட்ட அரிசிலாற்றங்கரை, கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே நான்கு மைல் தூரத்தில் அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அரிசிற்கரைப் புத்தூரா யிருப்பினும் இருக்கலாம். இப்போரில் நிருபதுங்கவர்மன் வெற்றி எய்தவே, சீவல்லபன் தோல்வியுற்றனன். இச் செய்தி நிருபதுங்க வர்மன் வாகூர்ச் செப்பேடுகளிலும் காணப்படு கின்றது. இந்நிகழ்ச்சியினால் சோணாட்டின் வடபகுதி, பல்லவர் ஆட்சிக் குள்ளாயிற்று என்று தெரிகிறது.

3

இவன் தன்னுடைய இறுதிக்காலத்தில் சிங்கள மன்னன் இரண்டாம் சேனன் (கி.பி.851-885) பாண்டிய நாட்டின்மேல்

1. Ep. Ind., Vol. XVIII, No. 2.

66

2. "குடகுட்டுவர் குணசோழர் தென்கொங்கர் வடபுலவர், அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்பட

3. லால்குடி, கண்டியூர், திருச்சின்னம்பூண்டி, திருக்கோடிகா முதலான ஊர்களில் நிருபதுங்கன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இச் செய்தி உறுதியாதல் உணர்க.