உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

55

படையெடுத்து வந்தனனென்றும் நிகழ்ந்த போரில் ஸ்ரீமாறன் தோல்வியுற்றதோடு உயிரையும் இழந்தானென்றும் வெற்றி யெய்திய சிங்களப் படைத்தலைவன் ஸ்ரீமாறனுடைய புதல்வன் வரகுணனுக்கு முடிசூட்டினான் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர் பராந்தக பாண்டியன் செப்பேடுகள் வன் பேராற்றல் காட்டிப் போர்புரிந்து போர்க்களத்தில் உயிர் துறந்தான் என்று கூறுகின்றன.'

பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழநாட்டின் வட பகுதியிலுள்ள சில ஊர்களில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் கல்வெட்டுக்களும் நிருபதுங்கவர்மன் கல்வெட்டுக்களும் காணப்படுவதால் சோழநாட்டில் எல்லைப்புறங்களில் பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் பல போர்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், அவற்றுள் சிலவற்றில் பாண்டியரும் சிலவற்றில் பல்லவரும் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரக் கிடக்கின்றன. ஆகவே, சீவல்லபனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்துள்ளன எனலாம். எனினும் இவன் பேராற்றல் படைத்த பெருவேந்தன் என்பதில் ஐயமில்லை. இவன் மயிலையிலிருந்த பொத்தப்பிச் சோழன் ஸ்ரீகண்டராஜன் என்பானோடு நட்புக் கொண்டிருந்தான். அவன் மகள் அக்களநிம்மடி என்பாள் இவன் அரசியருள் ஒருத்தியாவள். அவள் புதல்வனே ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பாண்டிய நாட்டை ஆண்ட பராந்தக பாண்டியனாவன். இவன் தன் தந்தையிடம் பெற்று ஆட்சிபுரிந்துவந்த பாண்டிய இராச்சியத்தைப் பல இன்னல்களுக்கிடையில் அஞ்சாமல் காத்துவந்தமையும் இறுதியில் ஊழ்வலியால் போர்க்களத்தில் தோல்வியுற்று உயிர் துறந்தமையும் அறியத்தக்கது. இவன் கி. பி. 862-ஆம் ஆண்டில் இறந்திருத்தல் வேண்டும் என்பது ஐவர்

1. A History of South India, K. A. N. (Second Edition) Page 154.

66

2.

3.

“ஒளி நிலை வேலது பாயபகு...லன் உம்பர்ல்வான் உலகணைந்தபின்”

....மயிலையர்கோன் பொத்தப்பிக் குலச்சோழன் புகழ்தருசிரீ கண்டராசன் மத்தமா மலைவளவன் மதிமகளக் களநிம்மடி திரு வயிறு கருவுயிர்த்த ஸ்ரீ பராந்தக மகாராஜன் (பராந்தக பாண்டியன் செப்பேடுகள்)*

59