உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

மலையிலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது.' இவனுடைய முதல் மகன் வரகுணவர்மன் ஆவன்.

இவன் சிறப்புப் பெயரால் அவனிப சேகரமங்கலம் என்னும் ஊர் ஒன்று திருச்செந்தூர்க் கண்மையில் இருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது.'

இவன் ஆட்சிக்காலத்தில் ‘அவனிப சேகரன் கோளகை’ என்னும் பொற்காசு ஒன்று பாண்டிநாட்டில் நாணயமாக வழங்கியது என்று தெரிகிறது.

எட்டி சாத்தன்

3

இவ்வேந்தன் ஆட்சியில் நிலவிய அரசியல் அதிகாரிகளுள் எட்டிசாத்தன் என்பான் பெரும்புகழ் படைத்த தலைவன் ஆவன். இவன் சங்கப் புலவர் ஒருவர் வழியில் தோன்றியவன். இவன் சாத்தன் என்று இயற்பெயரும் எட்டி என்னும் சிறப்புப் பெயரும் உடையவனாயிருத்தலை நோக்குமிடத்து, இவனுடைய முன்னோராகக் கூறப்படும் சங்கப்புலவர் மணிமேகலையின் ஆசிரியராகிய கூலவாணிகன் சாத்தனாராயிருத்தல் கூடுமோ என்ற ஐயம் நிகழ்கின்றது. இத்தலைவன் தென்பாண்டி நாட்டில் செய்துள்ள பெருந் தொண்டுகளும் அறங்களும் பலவாகும். இவனுக்கு இருப்பைக்குடி கிழவன் என்னும் பட்டம் பாண்டி வேந்தனால் வழங்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. இவன் முதலூர், தென் வெளியங்குடி என்னும் ஊர்களில் கோயில்களும் இருப்பைக்குடியில் ஓர் அமண்பள்ளியும் அமைத்துள்ளனன். எனவே இவனது சமயப் பொறை பெரிதும் போற்றத்தக்கதாகும். தென் வெளியங்குடி, கும்மணமங்கலம் என்ற ஊர்களில் இவன் தன் சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவுமாறு கிழவன் ஏரி என்னும் பெயருடைய இரண்டு ஏரிகள் வெட்டியுள்ளனன். மற்றும் இவன் வெட்டியுள்ள ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் இராமநாதபுரம் ஜில்லா சாத்தூர்த்

1. Ins. 705 of 1905.

2. Ep. Ind., Vol. XXI, No. 17.

ரு சிவன்

3. Annual Report on South Indian Epigraphy for 1929-30, part II, para 4. Indian Antiquary, Vol. XXI, p, 323.