உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 முதுமை யெய்தித் தளர்ச்சியுற்றிருந்தான். பாண்டி வேந்தனும் தன் கருத்தை நிறைவேற்றிக் கோடற்கு உரிய காலம் அதுவே என்று கருதி, கி.பி.880-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்படையுடன் சோணாட்டிற் புகுந்து, அம் மண்டலத்தில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள மண்ணி நாட்டிலிருந்த டவை என்ற நகரைக் கைப்பற்றினான். அந்நாட்களில் ளவரசனா யிருந்த ஆதித்த சோழன் இப்பாண்டியனை எதிர்த்துப் போர்புரிந்தும் வெற்றிபெற இயலவில்லை. எனவே, இடவை நகரும் அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பும் வரகுணவர்மன் ஆட்சிக்குள்ளாயின. இவன் சோணாட்டு இடவை மீது படையெடுத்த செய்தி, திண்டுக்கல்லுக் கண்மையிலுள்ள இராமநாதபுரத்தில் காணப்படும் ஒரு

கல்வெட்டால்' அறியப்படுகின்றது. இடவை நகரில் இவன் பாட்டன் முதல் வரகுணபாண்டியன் கட்டிய பாண்டியரது அரண்மனை இருந்த காரணம் பற்றியே இவன் முதலில் அதன்மீது

யெடுத்துச் சென்று, அதனையும், அதனைச் சூழ்ந்த பகுதியையும் கைப்பற்றிக் கொண்டான் என்க. இவ்வாறு பாண்டி வேந்தன் சோழ நாட்டில் ஒரு பகுதியைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கியதை யுணர்ந்த பல்லவ மன்னனாகிய அபராஜிதவர்மன் என்பான், சில திங்கள்களில் தன் படையைத் திரட்டிக் கொண்டு பாண்டியனை எதிர்த்துப் போர்புரிய ஆதித்த சோழனோடு புறப்பட்டான். அந்நாட்களில் கங்க நாட்டரசனாகிய முதல் பிருதிவிபதியும் தன் நண்பனாகிய அபராஜிதவர்மனுக்கு உதவி புரிய வேண்டிப் பெரும்படையுடன் சோணாட்டிற்கு விரைந்து வந்தனன். ஆகவே, பல்லவன், சோழன், கங்கன் ஆகிய மூவரும் சேர்ந்து வரகுணவர்மனை எதிர்த்துப் பொருதனர். அப்போது இடவையிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் போர்கள் நிகழ்ந்தன.

இறுதியில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணி யாற்றங்கரையிலுள்ள திருப்புறம்பயத்தில் கி. பி. 880-ஆம் ஆண்டில் ஒரு பெரும்போர் நடைபெற்றது. பல்லவ அரசனுக்கு உதவி புரியும் பொருட்டுத் துணைப்

1. Ins. 690 of 1905.