உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

59

படையுடன் வந்து பெரு வீரத்துடன் போர்புரிந்த கங்க மன்னனாகிய முதல் பிருதிவிபதி என்பான் இப் போரில் கொல்லப்பட்டான்.1 எனினும், வரகுணபாண்டியன் தோல்வி யெய்திச் சோழ நாட்டில் தான் கைப்பற்றியிருந்த பகுதியை விட்டுவிட்டுப் போகும்படி நேர்ந்தது. அபராஜிதவர்மனும் ஆதித்த சோழனும் போரில் வெற்றிபெற்று வாகை சூடினர். இப்போரின் பயனாக ஆதித்த சோழனுக்குச் சோணாடு முழுமையும் ஆட்சிபுரியும் தனி உரிமை கிடைத்தது. இப் போர் நிகழ்ச்சியினால் பாண்டியரது முதற்பேரரசின் வலிமை குன்றியது; வெற்றிபெற்ற அபராஜிதன் படைப்பெருக்கம் சுருங்கி விட்டமையின் பல்லவரது பேரரசின் வலிமையும் குறைந்து போயிற்று; பரகேசரி விசயாலயன் புதல்வனாகிய இராஜகேசரி ஆதித்த சோழன் தஞ்சை மாநகரில் முடிசூடி, சோழமண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பெருமை எய்தினான். சோழ மண்டலத்தில் பாண்டியரது ஆட்சியும் பல்லவரது ஆட்சியும் ஒருங்கே ஒழிதற்கும், சோழரது ஆட்சி மீண்டும் நிலை பெறுதற்கும் காரணமாயிருந்த இத்திருப்புறம் பயப் பெரும்போர் தமிழக வரலாற்றில் குறித்தற்குரிய ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இப்போரில் இறந்த முதல் பிருதிவிபதியின் நடுகற்கோயில் ஒன்றும், உதிரப்பட்டி என்னும் பெயருடைய நிலப்பரப்பும், கச்சியாண்டவன் கோயில் என்ற நடுகற்கோயிலும் திருப்புறம் பயத்தில் இன்றும் உள்ளன. கச்சி யாண்டவன் கோயில் என்பது போரில் இறந்த ஒரு பல்லவ அரசனது நடுகல் இருந்த இடமாயிருத்தல் வேண்டும். அப்பல்லவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆயினும், இவையெல்லாம் முற்காலத்தில் அங்கு நடைபெற்ற பெரும்போரை இக் காலத்தினர்க்கு உணர்த்தும் அடையாளங்கள் என்பது அறியற்பாலதாம்.

இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு இவ் வேந்தன் பாண்டி நாட்டில் எத்தனை யாண்டுகள் ஆட்சிபுரிந்தனன் என்பது ப்போது புலப்படவில்லை. இவனுடைய இறுதிக்காலத்தில் நிகழ்ந்த உள் நாட்டுப் போரில் இவன் தம்பி பராந்தக

1. S. I. I., Vol. II, No. 76, Verse 18.