உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பாண்டியன் வெற்றியடைந்து தனது தமையனை அரியணை யிலிருந்து நீக்கிவிட்டுத் தானே அரசாளத் தொடங்கிய செய்தி அவனுடைய செப்பேடுகள் வாயிலாக அறியப்படுகின்றது.'

இவ்வரகுணன் திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகவேள் திருவடிகளில் பெரிதும் ஈடுபாடுடையவன். இவன், அப்பெருமானுக்கு ஆண்டு முழுவதும் நாள் வழிபாடு நடத்துவதற்கு ஆயிரத்து நானூறு பொற்காசுகளை நிவந்தமாக வழங்கி அவற்றைப் பன்னிரண்டு ஊர்களுக்குப் பிரித்துக் கொடுத்து, காசு ஒன்றுக்கு ஆண்டொன்றிற்கு நெற் பொலிசை இரண்டு கலமாக அப்பன்னிரு ஊரினரும் திருச்செந்தூர்க் கோயிலுக்கு இரண்டாயிரத் தெண்ணூறு கல நெல் ஆண்டு தோறும் அளந்து வருமாறு ஏற்பாடு செய்துள்ளனன். இச்செய்தி, நாள் வழிபாட்டுத் திட்டங்களுடன் அக் கோயிலி லுள்ள ஒரு கருங்கற்பாறையில் இவ் வரகுண பாண்டியனது பதின்மூன்றாம் ஆட்சி யாண்டில் வரையப் பட்டுள்ளது.' இவனைப் பற்றிய பிறசெய்திகள் இப்போது தெரியவில்லை. இவன் காலத்தி லிருந்த அரசியல் தலைவர்களுள் ஒருவனைப் பற்றிச் சில செய்திகள் கிடைத்துள்ளன. அவற்றை அடியிற் காண்க. பராந்தகப் பள்ளிவேளான் நக்கம்புள்ளன்

இவன் நக்கன் என்பவன் புதல்வன்; புள்ளன் என்னும் இயற்பெயருடையவன்; பாண்டியன் வழங்கிய பராந்தகப் பள்ளிவேளான் என்ற பட்டமுடையவன்; வரகுணவர்மன் இடவைமீது படையெடுத்துச் சென்றபோது படைத்தலைவனா யிருந்து போரில் வெற்றிகண்டவன். இவன், திண்டுக்கல்லுக் கண்மையிலுள்ள இராமநாதபுரம் என்னும் ஊரில் பொது மக்கட்குப் பயன்படுமாறு ஒரு குளம் வெட்டுவித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.3

66

1. "......முன்பிறந்த வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்ப்பழனச் செழுநிலத்தைச் செருவென்றும்

99

2. Ep., Ind. Vol. XXI, No. 17.

3. Ins. 690 of 1905.