உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

பராந்தக பாண்டியன்

61

இவன் சீமாறன் சீவல்லபனுடைய இரண்டாம் புதல்வன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன். இவன் தன் தமையன் இரண்டாம் வரகுண பாண்டியன் இறந்த பின்னர் பட்டம் பெற்றுள்ளமையால் இவன் கி. பி. 880-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரியணையேறியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ஆனால், அவ்வாண்டை இப்போது அறிதற்கியலவில்லை. தளவாய்புரச் செப்பேடுகள் எனப்படுபவை இம்மன்னனுடைய ஏழாவது ஆட்சியாண்டில் வெளிப் பட்டவை. அவை இவனுடைய வெற்றிச் செயல்களையும் அறச் செயல்களையும் ம் நிரல்படக் கூறுகின்றன. அப்பகுதி பின்வருமாறு:

66

நகர்

கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக்கரணியும் தென்மாயனுஞ் செழுவெண்கையு பராந்த கன்னுஞ் சிலைக்கணீர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா ஹனங்கொண்டும் ஆறுபல தான்கண்டும் அமராலையும் பலசெய்துஞ் சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ கொண்டுங் கொங்கினின்று தேனூரளவும் குட குடகொங்க ருடல்மடிய வெங்கதிர் வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும் எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இரு நிலத்திலியற்று வித்தும் நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும் வென்றிப்போர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார்கடுஞ் சுடரிலை வேல் கலிப்பகை கண்டகோன்.”1

சின்னமனூர்ச் செப்பேடுகளும் இவ்வேந்தன் கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று அவனையும் அவன் களிற்றினங் களையும் கைப்பற்றிக்கொண்டான் என்றும், பெண்ணாகட நகரை அழித்தான் என்றும், கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடினான் என்றும், பல தேவதானங்களும் பிரம தேயங்களும் பள்ளிச் சந்தங்களும் அளித்துப் புகழெய்தினான்

ம்

1. சேரருக்குரிய விழிஞத்தை இவன் கைப்பற்றியது இதனால் வெளியாகின்றது. இதில் கூறப்பட்டுள்ள வீரதுங்கன்யாவன் என்று இப்போது அறியக்கூடவில்லை.

து