உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 என்றும் கூறுகின்றன. பாண்டியர்க்குத் திறைசெலுத்தி வந்த கொங்கு நாட்டரசன் முரண்பட்ட காரணம் பற்றி இவன் கொங்கர்களோடு போர் புரிந்திருத்தல் வேண்டும். இவன் பெண்ணாகடத்தை அழித்தமைக்குக் காரணம் யாது என்பது இப்போது புலப்படவில்லை. கரகிரி என்பது கரவந்தபுரமா யிருத்தல் வேண்டும். அவ்வூர் உக்கிரன் கோட்டை என்னும் பெயருடன் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலித் தாலூகாவில் இந்நாளில் உள்ளது. அவ்வூரில் நெடுஞ்சடையன் பராந்தகன் ஒரு பெருங்கோட்டை அமைத்திருந்தனன் என்பதும், அவ் வேந்தனுடைய அமைச்சர்களும் மாசாமந்தரும் பிறந்த இடம் அவ்வூரேயாம் என்பதும் பிறவும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று வழங்கப் பெற்று வருவதற்குக் காரணம் அங்கிருந்த தலைவன் ஒருவன் உக்கிரன் என்ற பெயருடையவனாயிருந்திருத்தல் வேண்டும். அவனும் இப்பராந்தகன் ஆட்சிக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். அத்தலைவன் இவ்வேந்தனோடு முரணிச் சில அடாச்செயல்கள் புரிந்திருத்தல் கூடும். அதுபற்றியே, இப் பாண்டி மன்னன் அவ்வுக்கிரனோடு போர்புரிந்து அவனையும் அவன் களிற்றினங் களையும் கைப்பற்றிக் கொணர்ந்தனனாதல் வேண்டும். கரவந்தபுரம் என்னும் ஊரின் பழைய பெயர் மறைந்து அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று அத்தலைவன் பெயரால் பிற் காலத்தில் வழங்கப் பெற்று வருதலை நோக்குமிடத்து, தோல்வி யுற்றுச் சிறைபிடிக்கப்பட்ட அத்தலைவன், பாண்டியனைப் பணிந்து மீண்டும் அக்கோட்டையைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். இக்காலத்தும் அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று வழங்கப்பட்டு வருதல் அறியத்தக்கது. அவ்வூரில் இம் மன்னனுக்கு அரண்மனையொன்று இருந்தது என்று தெரிகிறது.

இனி, இவன் தமையன் வரகுணவர்மனும் இவனும் ஒருவனுக்குப்பின் ஒருவன் ஆட்சிபுரிந்தும் இருவரும் சடைய வர்மன் என்றே பட்டம் புனைந்து கொண்டிருத்தல் குறிப்பிடத் தக்கதொன்றாம். இது, சோழ மன்னர்கள் பின்பற்றிய முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். அவர்களுள், உடன் பிறந்தோர்