உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

63

ஒருவர்பின் ஒருவர் ஆண்டகாலத்தும் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களை மாறிமாறிப் புனைந்து கொண்டமை

உணரற்பாலதாம்.

பல

இவனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயர் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. இவனுடைய செப்பேடுகளில் இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை கலிப்பகை கண்டகோன், மதுராபுர பரமேஸ்வரன், மாநிநீ மகரகேதநன்மன், வசுதாதிப வாசுதேவன், அசலாசலன், நவர்ஜ்யன், கூடற்கோன், குருசரிதன், செந்தமிழ்க்கோன், ஸ்ரீநிகேதனன் என்பனவாம். இவனுடைய பட்டத்தரசி வானவன் மாதேவி என்பாள். இவ்வரசி, சேரமன்னன் மகள் ஆவள். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சேரமாதேவி என்னும் நகர் இவ்வரசியின் பெயரால் அமைக்கப் பெற்றதேயாம். பராந்தக பாண்டியற்கு

ப் பட்டதரசியின்பால் பிறந்த புதல்வனே மூன்றாம் இராசசிம்மபாண்டியன் ஆவன். கி. பி. 900-க்கு அணித்தாக இப்பராந்தகன் இறந்தனன் என்று தெரிகிறது. எனவே, சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் வரையில் இவன் ஆட்சிபுரிந்தனாதல் வேண்டும்.

+