உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

6. கி.பி. 900 முதல் கி.பி. 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்ம பாண்டியன்

இவ்வேந்தன் சடையவர்மன் பராந்தகனுடைய புதல்வன்; சடையன் மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்தர கௌரவ மேரு முதலான பட்டங்களையுடையவன்; 'எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த பள்ளிச் சந்தமும் எத்திசையும் இனிதியற்றி'ப் புகழ்பெற்றவன். இவன், கி.பி. 900-த்தில் பட்டம் எய்தியவன் ஆவன்.

-

ம்மன்னனது பதினாறாம் ஆட்சியாண்டில் வரைந்து அளிக்கப்பெற்றனவே சின்னமனூர்ச் செப்பேடுகள் என்பது உணரற்பாலது. இக்காலத்தில் சின்னமனூர் என்று வழங்கும் நற்செய்கைப் புத்தூர்க்கு மந்தர கெளரவ மங்கலம் எனப் பெயரிட்டு அதனை இவ்வரசன் ஓர் அந்தணற்குப் பிரமதேயமாக வழங்கிய செய்தியையும் இவ்வேந்தற்கு முன்னர்ப் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர் சிலர் வரலாறுகளையும் அத்தொல்குடியின் பண்டைப் பெருமை களையும் அச்செப்பேடுகள் நன்கு அறிவிப்பனவாகும். எனவே, கி. பி. எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட பாண்டி வேந்தர்களின் வரலாறுகளை அறிந்து கோடற்கு அச் செப்பேடுகள் சிறந்த ஆதாரங்களாக இருப்பது வரலாற்றா ராய்ச்சியாளர் பலரும் உணர்ந்ததோர் உண்மையாகும்.

எதிர்த்த

இவன் உலப்பிலிமங்கலத்தில் தன்னை பகைஞர்களை வென்றமையும், கொடும்பாளூர் மன்னனது பெரும் படையைப் புறங்காட்டியோடச் செய்தமையும், வஞ்சிமாநகரில் பெரும்போர் புரிந்தமையும், தஞ்சை

1. South Indian Inscriptions, Vol. III, No. 206.