உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

75

ஒலிதான் கேட்கப்பெற்றது என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன'.

இம்மன்னர் மன்னன் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித் துள்ளான். இவன் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், அவர்கள் இவன்மேல் பாடிய பாடல்களுள் இரண்டு வீரசோழிய உரையில் மேற் கோளாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றால் இவன் சிவபெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவன் என்பதும் பௌத்தம் முதலான புறச் சமயங்களை வெறுக்காமல் ஆதரித்து வந்தவன் என்பதும் இனிது வெளியாகின்றன. பௌத்த சமயத்தினரான தமிழ்ப் புலவர் ஒருவர் இவ்வரசன் வண்மையும் வனப்பும் திண்மையும் சிறந்து உலகில் வாழுமாறு புத்தர் பெருமானை வேண்டிப் பரவியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாம். எனவே, இவன் சமயப் பொறையுடையவனாய்ப் பல்வகைச் சமயங்கட்கும் பாதுகாவல் பூண்ட பெருங்குண வேந்தனாக வாழ்ந்து வந்தனன் என்பது தெள்ளிது.

இனி, வீரசோழிய உரையிற் காணப்படும் அப்பழைய பாடல்கள், இவனை ‘மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர்’ என்றும் 'பழையாறை நகர்ச் சுந்தரச் சோழர்' என்றும் கூறுகின்றமையின் இவன் பழையாறை நகரிலிருந்து ஆட்சி புரிந்திருத்தல் வேண்டுமென்பது நன்கறியக்கிடக்கின்றது. அந்நகர், கும்பகோணத்திற்குத் தென் மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறை என்னும் பெயருடன் இந்நாளில் ஒரு சிற்றூராக உள்ளது. அச்சிற்றூரையும் அதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், சோழமாளிகை,

1. S.I. I., Vol. III, No. 205, Verse 58.

2. இந்திர னேறக் கரியளித் தார்பரி யேழளித்தார் செந்திரு மேனித் தினகரற் குச்சிவ னார்மணத்துப் பைந்துகி லேறப் பல்லக் களித்தார் பழையாறைநகர்ச் சுந்தரச் சோழரை யாவரொப் பார்களித் தொன்னிலத்தே போதியந் திருநிழற் புனிதநிற் பரவுதும்

மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச்

சோழர் வண்மையும் வனப்பும்

(வீரசோ - அலங். 10)

திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே.

(வீரசோ - யாப்பு. 11. )