உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




77

9. உத்தம சோழன் கி. பி. 970-985

வன் முதல் கண்டராதித்த சோழனுடைய புதல்வன். அவ்வேந்தன் இறந்தபோது இவன் சிறுகுழந்தையாயிருந்த மையால் முடிசூட்டப் பெறவில்லை. அந்நாளில் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயன் என்பவன் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்று அரசாண்டான் என்பதும் பிறகு அவன் மகன் சுந்தர சோழன் ஆட்சி புரிந்தனன் என்பதும் முன்னர்க் கூறப்பட்டுள்ளன. சுந்தரசோழனுக்குப் பின்னர் அவன் மகன் முதல் இராசராச சோழன் பட்டம் பெற்று அரசாளவேண்டும் என்று சோழநாட்டி லிருந்த பொதுமக்கள் பெரிதும் விரும்பினர் என்பது திருவாலங் காட்டுச் செப்பேடுகளால் நன்கறியக் கிடக்கின்றது. அன்னோர் அங்ஙனம் விரும்பியும், இராசராச சோழன், தன் பெரிய பாட்டன் புதல்வனும் தனக்குச் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழனது உரிமையையும் விருப்பத்தையும் மதித்து இவனுக்குச் சோழநாட்டின் ஆட்சியை அளித்தனன் என்பது ஈண்டு உணரற் பாலது. எனவே இராசராச சோழனது நியாய உணர்ச்சியும் அறநெறி பிழையாக் கொள்கையுமே உத்தம சோழன் முடி சூட்டப்பெறுவதற்கு ஏதுக்களாக இருந்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவன் முடிசூட்டு விழா கி. பி. 969 இன் இறுதியிலாதல் கி. பி. 970 இன் தொடக்கத்திலாதல் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது திருவிடை மருதூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது'. இவனைக் கோப்பரகேசரி வர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்' என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றமையால் இவ்வேந்தன் ‘பரகேசரி' என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன் என்பது தேற்றம். இவனுக்கு முன் ஆட்சிபுரிந்த சுந்தர சோழன் ‘இராச கேசரி' என்ற பட்டம்

1. S.I. I., Vol. III, No. 205, Verse 69.

2. Ibid, No. 131.

3. Ibid, No. 128 and 150.