உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 பெற்றவனாதலின் இவன் 'பரகேசரி' என்று தன்னைக் கூறிக் கொள்வது அக்காலத் தொழுகலாற்றிற்கு ஏற்புடையதேயாம்.

7

இனி, உத்தம சோழன் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுல்லைவாயில்', காஞ்சிபுரம், திருவொற்றியூர், திருவடந்தை, மீஞ்சூர்' என்னும் ஊர்களிலும், வட ஆர்க்காடு ஜில்லாவில் பழங்கோயில், திருமால்புரம் என்னும் ஊர்களிலும், தென்னார்க்காடு ஜில்லாவில் திருவதிகை வீரட்டானத்திலும் காணப்படுகின்றமையால் தொண்டை நாடும் திருமுனைப்பாடிநாடும் இவ்வேந்தன் ஆட்சிக்குட் பட்டிருந்தன என்பது தெள்ளிதின் விளங்கும். இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்த அந்நாடுகள் சுந்தரசோழன் காலத்திலேயே சோழர் ஆட்சிக்குள்ளாயின. எனவே, உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில் அந்நாடுகள் எத்தகைய இன்னல்களுமின்றி மிக்க அமைதியாக நன்னிலையில் சிறந்திருந்தன என்பது அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

சோழ நாட்டிலும் இவ்வரசன் காலத்துக் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவை, இவன் தாய் செம்பியன் மாதேவியும் இவன் தேவிமார்களும் அரசியல் அதிகாரிகளும் புரிந்த அறச்செயல்களையெல்லாம் கூறுவனவாயுள்ளன. அவற்றால் அக்காலத்து ஆட்சி முறை, மக்கள் நிலை, வழக்கவொழுக்கங்கள், பொருளாதார நிலை முதலானவற்றை நன்கறியலாம்.

இனி, இம்மன்னனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டில் வரையப்பெற்ற செப்பேடுகள்'. சென்னையிலுள்ள பொருட்

1.S.I.I., Vol. III, No. 141.

2. Ins. 2 of 1906.

3. S.I. I., Vol. III, No. 143,

4. Ibid, No. 125.

5. Ins. 134 of 1916.

6. Ins.352 of 1925.

7.S.I.I., Vol. III, No. 142.

,

8. Ins. 398 of 1921.1

9. S.I. I., Vol. III, No. 128.