உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

79

காட்சிச் சாலையில் இருக்கின்றன. அவற்றுள் வடமொழிப் பகுதி காணாமற் போய்விட்டமையின் தமிழ்ப் பகுதி மாத்திரம் இப்போது உள்ளது. அதன் துணை கொண்டு இவ்வேந்தன் முன்னோர் வரலாற்றை அறிய இயலாது. எனினும், அவன் காலத்துச் செய்திகளுள் சிலவற்றையும் சோழர்களின் ஆட்சி முறையையும் அதனால் அறிந்து கொள்ளலாம். அன்றியும், பத்தாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் வரிவடிவில் எவ்வாறு இருந்தன என்பதை உணர்ந்து கொள்வதற்கு அச்செப்பேடுகள் பயன்படுவனவாகும்.

உத்தம சோழனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது செம்பியன் மாதேவி என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது. அவர்களுள் ஐவர் பெயர்கள், அவ்வூரில் ரேகல்வெட்டில் குறிக்கப் பட்டிருக்கின்றன. அன்னோர் பட்டன் தானதுங்கி, மழபாடித் தென்னவன்மாதேவி, இருங்கோளர் மகள் வானவன் மாதேவி, விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள், பழு வேட்டரையர் மகள் என்போர். பட்டத்தரசியாக விளங்கியவள் மூத்த நம்பிராட்டியாகிய திரிபுவன மாதேவி யாவள்'. அன்றியும் பஞ்சவன்மாதேவி, சொன்னமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் என்னும் வேறுமனைவியரும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், தம் மாமியாகிய செம்பியன்மாதேவி பெயரால் தஞ்சை ஜில்லா நாகப்பட்டினந் தாலுகாவில் உள்ள செம்பியன் மாதேவி என்னும் ஊரில்' எடுப்பித்த திருக்கயிலாயம் என்னும் சிவாலயத்திற்கு நாள்வழிபாட்டிற்கும் திங்கள் விழாக் களுக்கும் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர். இச்செயலால் அவர்கள் எல்லோரும் தம் கணவனைப் பயந்த மாமியிடத்து எத்துணை அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பது இனிது விளங்கும்.

1. Ins. 494 of 1925.; Ins. 298 of 1908.

2. Ins. 488 of 1925 and Ins. 496 of 1925.

3. Ins. 491, 492 and 496 of 1925.

இவ்வரசிகளுள் ஒருத்தி மேலே குறிப்பிட்ட பழுவேட்டரையர் மகளாக ஒருகால் இருப்பினும் இருக்கலாம்.

4. செம்பியன் மாதேவி என்பது, உத்தமசோழன் தாயாகிய செம்பியன்மாதேவி தன்பெயரால் அமைத்த ஒரு நகரமாகும்