உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இனி, முதல் இராசராசசோழன் ஆட்சியில் கோயிற்காரி யங்களும் பிற அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணித்துவந்த மதுராந்தகன் கண்டராதித்த சோழன் என்பவன் இவ்வரசனுடைய புதல்வன் ஆவன்'. இவ்வரசிளங் குமரன், ஐவரடங்கிய ஒரு குழுவுடன் அற நிலையங்களின் கணக்கு களை ஆராய்ந்து வந்தமை கல்வெட்டுக்களால் புலனாகின்றது'.

மலாடு எனவும் சேதிநாடு எனவும் வழங்கிய மலைய மானாட்டில் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட சித்தவடத் தடிகள் என்பான் உத்தமசோழனுக்குத் திறை செலுத்திக் கொண்டு அப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்'. சி மூன்றாங் கிருஷ்ணதேவனது ஆட்சியின் 17 -ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றால் அவன் நரசிங்கவர்மன் என்னும் அபிடேகப் பெயருடையவன் என்பதும் வெளியாகின்றது".

திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவி லுள்ள கோவந்தபுத்தூரில் காணப்படும் சில கல்வெட்டுக் களால்' இவ்வரசன் காலத்திலிருந்த அரசியல் அதிகாரி ஒருவனது வரலாறு அறியப்படுகின்றது. அவன் குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர்நக்கனான விக்கிரமசோழ மாராயன் எனபான். அவன் உத்தம சோழனுடைய பெருந்தரத்து அதிகாரி களுள் ஒருவன். அவன் குவளாலமுடையான் என்று தன்னைக் கூறிக் கொண்டிருத்தலால் அவன் முன்னோர்கள் கங்க மண்டலத்திலுள்ள குவளாலபுரத்திலிருந்து வந்து பழுவூரில் தங்கியவராதல் வேண்டும். அவன், அரசனால் வழங்கப்பட்ட விக்கிரம சோழமாராயன்" என்ற பட்டம் பெற்ற வனாக இருத்தல் அறியத்தக்கது. அத்தலைவன் கோவந்த புத்தூரிலுள்ள

1. S.I. I., Vol. III, No. 49; Ins 218 of 1921.

2. Ins. 283 of 1906.

3. Ins. 193 of 1931.

4. Ep. Ind., Vol. VII, pp. 135 & 136.

5. தமிழ்ப்பொழில் ஏழாந்துணரில் யான் வெளியிட்டுள்ள இக்கல்வெட்டுக்களைக் காணலாம் (துணர் 7. பக் 296-303)

6. பண்டைத் தமிழ் வேந்தர்கள் தம் அரசியல் அதிகாரிகளுள் தக்கோர்க்குப் பட்டம் வழங்கிப் பாராட்டுவது பழைய வழக்கம் என்பது 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்னும் வஞ்சித்திணைக்குரிய துறையொன்றால் அறியப்படுகின்றது.