உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

காந்தளூர்ச் சாலை என்பது திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி யாக இந்நாளில் உளது. அதனை வலியசாலை என்றும் வழங்குவர். அது கடற்கரைப்பட்டினம் என்பது ‘சேரலன் வேலைகெழு காந்தளூர்ச் சாலை' என்ற கல்வெட்டுத் தொடரால் பெறப் படுகிறது. அங்குச் சேர மன்னனோடு இராசராச சோழன் போர் நிகழ்த்தியமைக்குக் காரணம் தெளிவாகப் புலப்பட வில்லை யாயினும் ஓரளவிற் குறிப்பாகத் தெரிகிறது. இவன் காலத்தில் சேர நாட்டில் ஆட்சி புரிந்தவன் பாற்கர ரவிவர்மன் என்பான். அவன் கி.பி. 978 முதல் 1036 வரையில் அந்நாட்டில் அரசாண்டான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. எனவே, இராசராச சோழன் ஆட்சிக் கால முழுமையும் அவன் இருந்தனன் என்பதில் ஐயமில்லை. இராசராச சோழனுக்கும் பாற்கர ரவிவர்மனுக்கும் பகைமை உண்டாக்கிப் போர் நடை பெற்றமைக்குக் காரணம், இவன் சேர நாட்டிற்கனுப்பிய தூத னொருவனை அவன் அவமதித்து இழிவாக நடத்தி உதகையில் சிறையிட்டிருந்தமையேயாம். இச்செய்தி, கவிச் சக்கரவர்த்தி யாகிய ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற உலாக்களில் மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. தூதர்களை அவமதிப்பதும், சிறையிடுவதும் அரசராயினார்க்கு அடாத செயல்களே. அன்றியும், அச்செயல்கள் அரச நீதிக்கு மாறு பட்டனவும் ஆகும். அறநெயியிற் பிறழாத சேரர்குடியிற் பிறந்த பாற்கர ரவிவர்மன் என்பான், இராசராச சோழன் தூதனை அவ்வாறு நடத்தியமைக்குக் காரணம் யாது என்பது இந்நாளில் புலப்படவில்லை. அக்கொடுஞ் செயல்களை யுணர்ந்த இராசராசசோழன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு சேர நாட்டிற்குச் செல்வானாயினான். அங்ஙனம் செல்லுங்கால் பாண்டி நாட்டைக் கடந்து செல்வது

1. Travancore Archaeological Series, Vol. II, pp. 4 & 5.

2. S. I. I., Vol. II, p. 241; Ibid, Vol. VIII, No. 199.

3. T. A. S., Vol. II, p. 32.

4.

'தூதற்காப்

பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமுங் கொண்டு மலைநாடு கொண்டோனும்'

சூழவும்

ஏறிப் பகலொன்றில் எச்சுரமும் போயுதகை நூறித்தன் றூதனை நோக்கினோன்

(விக்கிரம சோழன் உலா, வரிகள் 32-34)

(குலோத்துங்க சோழன் உலா, 46 -48).