உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

91

இன்றியமையாததாயிற்று. பாண்டியன் அமர புயங்கன் என்பான் சேரனுக்குச் சிறந்த நண்பனாவன். எனவே, அவன் படையுடன் வந்து இராசராசனை எதிர்த்தான். அதுபோது நிகழ்ந்த போரில் இவன் பாண்டியனைப் புறங்கண்டு தன் படையுடன் சேரநாட்டை அடைந்தான். கடற்கரைப் பட்டினமாகிய காந்தளூர்ச் சாலையில் சேர மன்னனுக்கும் சோழ மன்னனுக்கும் பெரும்போர் நடைபெற்றது. அப்போரில் சேர மன்னனுடைய கப்பற் படைகள் அழிந்து போயின. பின்னர், இராசராச சோழன் தன் தூதன் சிறையிடப்பெற்றிருந்த உதகைக்குப் படையுடன் சென்றான். உதகை என்பது கன்னியாகுமரி ஜில்லாவிலுள்ள கல்குளந் தாலூகாவில் நாகர்கோயிலுக்கு வடமேற்கேயுள்ள ஒரு நகரமாகும் . அஃது அக் காலத்தில் மாபெரும் மதில்கள் சூழ்ந்ததாய் மாளிகைகளும் சூளிகைகளும் தன்பாற்கொண்டு உயரிய கோபுரங்கள் அமைந்த வாயில்களையுடையதாய்ச் சேரர்க்குரிய சிறந்த நகரங் களுள் ஒன்றாக நிலவியது. அந்நகர்க்குத் தன் படையுடன் சென்ற இராசராச சோழன் அங்கு எதிர்த்த சேரன் படையைப் போரிற் புறங்கண்டு அதிலிருந்த கோட்டை மதில்கள், கோபுரங்கள், மாளிகைகள் முதலானவற்றைத் தன் படைகளால் தகர்ப்பித்து எஞ்சியவற்றை எரிகொளுவிச் சூறையாடினான்'. அங்குச் 1. Travancore Archaeological Series, Vol. II, p. 5.

2.

- ‘சூழி

(a) மதகயத்தால் ஈரொன் பதுசுரமு மட்டித்

துதகையைத்தீ யுய்த்த உரவோன்

(இராசராச சோழன் உலா, வரிகள் 40 - 42).

(b) சதய நாள்விழா உதியர்மண்டலந்

தன்னில் வைத்தவன் தனியோர் மாவின்மேல்

உதய பானுவொத் துதகை வென்றகோன் ஒருவகை வாரணம் பலகவர்ந்ததும்

c) சாரல் மலையட்டுஞ் சேரன்மலைஞாட்டுத் தாவடிக்குவட்டின் பாவடிச்சுவட்டுத் தொடர்நெய்க் கனகம் துகளெழ நெடுநற் கோபுரங் கோவை குலைய மாபெறும்

புரிசைவட்டம் பொடிபடப் புரிசைச் சுதைகவின்படைத்த சூளிகை மாளிகை

உதைகைமுன் னொள்ளெரி கொளுவி

உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு

(கலிங்கத்துப்பரணி, பாடல் 201).

இது திருக்கோவலூரிலுள்ள முதல் இராசராசசோழன் காலத்துக்கல்வெட்டு; அகவற் பாவில் அமைந்தது (S. I. I., Vol. VII, No. 863).