உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

93

இவன் தென் திசையிலிருந்து தன் திக்கு விசயத்தைத் தொடங் கினான் என்றும் அப்போது பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாண்டியன் அமர புயங்கன் என்பவன் முதலில் தாக்கப்பட்டான் என்றும் அவன் போரில் தோல்வியுறவே அந்நாடு இவ்வேந்தனால் கைப்பற்றப்பட்ட தென்று அச்செப்பேடுகள் கூறுகின்றன'. இராசராசன் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றபோது இவனை இடையில் தடுத்துப் போர் செய்தவன் அவ்வமர புயங்கனே யாவன். அக்காரணம் பற்றியே இவன் தன் திக்கு விசயத்தின்போது முதலில் அப்பாண்டியனைத் தாக்கிப் போரில் வென்று அவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான் என்பது ஈண்டுணரற் பாலது. இவன் கல்வெட்டுக்கள் எல்லாம் செழியரைத் தேசு கொள் கோவிராச கேசரிவர்மன் என்று கூறுவதால் இவன் பாண்டியர்களை வென்று முற்றும் அடக்கினமை பெறப்படு கிறது. 'செழியர்' என்று பன்மையில் குறிப்பிடுவதால் ஒருவர்க்கு மேற்பட்ட பாண்டிய மன்னர்களை இவன் வென்றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது. அன்றியும், தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள இவன் கல்வெட்டுக்கள், 'மலைநாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்து என்று கூறுவதால் இவன் காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் என்பதும் அவர்கள் எல்லோரையும் இவன் வென்று அடக்கி விட்டனன் என்பதும் நன்கு வெளியாதல் காண்க. திருவாலங் காட்டுச் செப்பேடுகளில் கூறப்பெற்ற பாண்டியன் அமரபுயங்கன் என்பவன் அந்நாட்களிலிருந்த பாண்டியர்க்குத் தலைவன் போலும். இராசராச சோழனுக்குப் பாண்டிய குலாசனி என்னும் சிறப்புப் பெயர் இருப்பதாலும் பாண்டி மண்டலம் இராசராச மண்டலம் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றமையாலும் இவ் வேந்தன் கல்வெட்டுக்கள் இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு முதல் பாண்டி நாட்டில் காணப் படுதலாலும், போர் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்நாடு இவனது ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது என்பது ஒரு தலை.

1.S. I. I., Vol. III, No. 205, Verse 76 -79.

2.S.I.I.,Vol. II, No. 59.