உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

95

வென்று தன்னடிப்படுத்திய காரணம் பற்றி இவனுக்குக் கீர்த்தி பராக்கிரமன் என்னும் சிறப்புப் பெயர் வழங்கியமை அறியற்பாலதாம்'. அஃது இவன் இரண்டாம் முறை சேரனுடன் நடத்திய போராகும்.

பிறகு இராசராச சோழனது படை குடமலை நாட்டைத் தாக்கிற்று. அந்நாடு இக்காலத்தில் குடகு என்று வழங்கும் நாடேயாம். கொங்காள்வார் மரபில் வந்த ஒருவன் அப்போது அதனை அரசாண்டு கொண்டிருந்தான். பணசோகே என்ற இடத்தில் ஒரு பெரும்போர் நடைபெற்றது. அதில் அவன் தோல்வியுற்று ஓடிப் போனான். அப்போரில் வீரங்காட்டிப் போர்புரிந்த மனிஜா என்பவன் செய்கையைப் பாராட்டி, இராசராச சோழன் ஆணையின் படி அவனுக்கு க்ஷத்திரய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் வழங்கப் பெற்ற தோடு மாளவ்வி என்னும் ஊரும் அளிக்கப்பட்டது. மனிஜாவின் மரபினர் சுமார் நூறாண்டுகள் வரையில் சோழர்கட்கு அடங்கிய குறுநில மன்னராய்க் கொங்காள்வார் என்னும் பட்டத்துடன் குட நாட்டில் அரசாண்டு வந்தனர். என்வே, அப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு குடகு மலை நாடு அம் மனிஜா என்பவனுக்கே அளிக்கப் பட்டது போலும்.

அதன் பின்னர், குடகு நாட்டிற்குப் பக்கத்திலுள்ள கங்க பாடியும் நுளம்ப பாடியும் இராசராசன் படைகளால் தாக்கப் பெற்றன. கங்கபாடி என்பது மைசூர் இராச்சியத்தின் தென் பகுதியும் சேலம் ஜில்லாவின் வடபகுதியும் தன்னகத்துக் கொண்ட கங்க நாடாகும். அதன் தலைநகர் தழைக்காடு என்பது. அந்நாட்டைக் குவளாலபுர பரமேசுவரர்களான மேலைக் கங்கர்கள் ஆண்டு வந்தனர். நுளம்பபாடி என்பது மைசூர் இராச்சியத்தின் கீழ்ப்பகுதியையும் பல்லாரி ஜில்லாவையும் தன்பாற் கொண்ட நாடாகும்'. பல்லவருள் ஒரு கிளையினரான நுளம்பர்கள் அதனை ஆண்டு வந்தனர். அப்படையெடுப்பின் இறுதியில், மைசூர் ஜில்லாவைத் தன்னகத்துக் கொண்ட

2.

1. Annual Report on South Indian Epigraphy for the year 1911 - 12, para 22. சிலப்பதிகாரம், காதை XI, வரி 53.

3. Ep. Ind., Vol. X, p. 57.