உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

97

யிருந்த பாண்டியர்க்கும் சேரனுக்கும் உற்றுழியுதவிவந்தனன். அதுபற்றியே இராசராசன் ஈழ மண்டலத்தின் மீது படை யெடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது எனலாம். அப்படையெழுச்சியிலும் தலைமை வகித்துச் சென்றவன் இவன் புதல்வனாகிய இராசேந்திர சோழனேயாவன். கி. பி. 991- ல் ஈழ மண்டலத்தில் படைவீரர்களால் குழப்பம் உண்டாகவே, அரசனாகிய ஐந்தாம் மகிந்தன் என்பான் அதனை அடக்கும் ஆற்றலின்றி அம்மண்டலத்துள் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு ஓடிவிட்டான். எனவே சோழ நாட்டுப் படை அம்மண்டலத்தின் வட பகுதியை எளிதில் கைப்பற்றிக் கொண்டது. அன்றியும், அந்நிலப் பரப்பு மும்முடி சோழ மண்டலம் என்று பெயரிடப்பெற்று' இராசராச சோழன் ஆட்சிக்கு உள்ளாக்கப்பட்டது. 'முரட்டொழில் சிங்களர் ஈழ மண்டலம்' என்றும் 'எண்டிசை புகழ் தர ஈழ மண்டலமும்' என்றும், இவன் மெய்க்கீர்த்திகள் கூறுவனவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், ஈழ நாட்டுப் போரில் வலிமிக்க சிங்கள வீரர்கள் பேராற்றல் காட்டிப் போர் புரிந்தனர் என்பதும் அத் தகை யாரைச் சோணாட்டுப் படை வென்று அவர்களது நாட்டைக் கைப்பற்றியமை இராசராசனுக்கு யாண்டும் பெரும் புகழை யுண்டுபண்ணியது என்பதும் நன்கு வெளியாகின்றன.

பண்டைக்கால முதல் ஈழ மண்டலத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் போரில் சோழரால் அழிக்கப்பட்ட மையால் அம்மண்டலத்தின் நடுவணுள்ள பொலன்னருவா என்னும் நகரம் சனநாதமங்கலம்' என்று பெயரிடப்பெற்றுச் சோழர்க்குத் தலைநகராக வைத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன் ஈழ மண்டலத்தின்மீது படையெடுத்துச் சென்ற தமிழ் வேந்தர்கள் அதன் வட பகுதியை மாத்திரம் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். இராசராசன் அம்மண்டலம் முழுவதையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்த வேண்டும் என்று எண்ணிய படியால் பழைய தலைநகரை விடுத்து நாட்டின்

1. The Cholas, Vol. I, p. 205.

2. S. I. I., Vol. II, No. 92.

3. S. I. I., Vol. IV, No. 1388.