உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

99

என்னும் பெயர் இருத்தலால் தன் தாயாகிய வானவன் மாதேவியை நினைவு கூர்தற்காரணமாகத் தலைநகராகிய பொலன்னருவாவில் இராசராச சோழன் அதனை எடுப்பித் திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. ஈழ மண்டலத்தில் காணப்படும் இராசராசன் கல்வெட்டுக்களும் அஃது இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை வலியுறுத்து கின்றன. இவ் வேந்தன் தஞ்சை மாநகரில் தான் எடுப்பித்த பெருங்கோயிலாகிய இராசராசேச்சுரத்திற்கு ஈழ மண்டலத்திலும் சில ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளனன் என்பது அக்கோயிலிற் காணப்படும் கல்வெட்டுக் களால் புலப்படு கின்றது’. எனவே, ஈழ மண்டலம் இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தாலன்றி அவ்வூர் களை அக்கோயிலுக்கு நிவந்தமாக விட்டிருக்க இயலாதன்றோ?

.

இனி, தஞ்சை பெரிய கோயிலிலுள்ள கல்வெட்டொன்றில், 'சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி வந்த ஸ்ரீபாத புஷ்பமாக அட்டித் திருவடி தொழுந்தன' என்ற தொடர்கள் காணப்படு கின்றன. இராசராச சோழனது ஆனைமங்கலச் செப்பேடுகளும் இவன் சத்தியாசிரயனைவென்ற செய்தியைக் குறிப்பிடு கின்றன. அன்றியும், சத்தியாசிரயன் இராசராசனது கடல் போன்ற பெரும் படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடி விட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, மேலைச் சளுக்கிய மன்னனாகிய சத்தியாசிரயனுக்கும் இராசராச சோழனுக்கும் பெரும் போர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், அதில் இராசராசனே வெற்றி பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் நன்கு வெளியாகின்றன. மேலைச் சளுக்கியர்க்கும் சோழர்க்கும் பகைமை ஏற்பட்டமைக்குக் காரணம் புலப்படவில்லை. ஒரு காலத்தில் மேலைச் சளுக்கியர்

1. S. I. I., Vol. IV, No. 1388.

2. The Cholas, Vol. I, p. 206.

3. S. I. I., Vol. II, No. 92.

4. S. I. I., Vol. II, page. 7

5. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 31.

6. S. I. I., Vol. III, No. 205, Verse 81.