உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ஆட்சிக்குட்பட்டிருந்த நுளம்ப பாடியை இராசராசன் வென்று தன் ஆட்சிக்குள்ளாக்கினமையே அன்னோர் பகைமைக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம். அன்றியும், வேறு காரணங்களும் இருத்தல் கூடும். அவை, இப்போது புலப்படவில்லை.

மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் தைலபன் இறந்த பின்னர், அவன் மகன் சத்தியாசிரயன் என்பவன் இரட்ட பாடி ஏழரை இலக்கத்திற்கு அரசனானான். தார்வார் ஜில்லா ஹொட்டூரில் கி. பி. 1007-ஆம் ஆண்டில் வரையப்பெற்றுள்ள அவன் கல்வெட்டொன்று, 'சோழர் குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்த விநோதன் மகனும் ஆகிய நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்களடங்கிய பெரும்படையுடன் பீசப்பூர் ஜில்லா விலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும் இளங்குழவிகள், மறையோர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவிய ராகக் கொண்டும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான் என்று கூறுகின்றது1. அன்றியும், அத்தகைய வீரனை நாட்டைவிட்டு ஓடும்படி செய்தவன் சத்தியாசிரயன் என்று அக் கல்வெட்டுப் புகழ்ந்து கூறுகின்றது. இதனால் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் அவன்மகன் இராசேந்திரன் மேலைச் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வென்று வந்த செய்தி உறுதி யாதல் காண்க. ஆனால் பகைப்புலத்தரசன் கல்வெட்டில் காணப்படும் அத்துணை அழிவு வேலைகளைச் சோழ இராசகுமாரனாகிய

ராசேந்திரன் செய்திருக்கமாட்டான் எனலாம். அப்போரில் சோழர்கள் வெற்றி பெற்றுப் பெரும் பொருளுடன் திரும்பினரே யன்றி அந்நாட்டைக் கைப்பற்றிக்கொள்ளவில்லை என்பது திண்ணம். சோழ மன்னரின் கல்வெட்டுக்கள் அந்நாட்டில் காணப்படாமையே இச்செய்தியை நன்கு வலியுறுத்துகின்றது. மேலைச் சளுக்கிய நாட்டுப் போர்க்களத்தில் இராசேந்திரன் ஆணையின் படியே, சத்தியாசிரயன் ஏறியிருந்த யானையைக் 1. Ep. Ind., Vol. XVI p.74.