உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

101

குத்தி வீழ்த்த முயன்ற ஊற்றத்தூர்ச் சுருதிமான் நக்கன் சந்திரனான இராசமல்ல முத்தரையன் என்னும் வீரன் இறந்தனன் என்று திருச்சிராப்பள்ளி ஜில்லா ஊற்றத்தூரிலிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. அப் போரில் இராசராசன் வெற்றி எய்தியமை பற்றித் தஞ்சைப் பெரிய கோயிலில் தட்சிணமேருவிடங் கர்க்குப் பொற்பூக்கள் வழங்கியுள்ளான்'. அப்போரின் இறுதியில் துங்கபத்திரை யாற்றிற்கு தெற்கேயுள்ள நாடுகள் இராசராச சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம்.

இராசராசன் மெய்க்கீர்த்தியில் இவன் வேங்கை நாடு கொண்டமையும் குறிக்கப்பட்டுள்ளது. வேங்கை நாடு என்பது கிருஷ்ணை, கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் முற்காலத்தில் அமைந்திருந்த ஒரு நாடாகும். அந்நாட்டை மேலைச் சளுக்கியரின் தாயத்தினரான கீழைச் சளுக்கியர் அரசாண்டு வந்தனர். கி. பி. பத்தாம் நூற்றாண்டின் நடுவில் கீழைச் சளுக்கிய அரச குமாரர்களுக்குள் சிறிது மனவேறுபாடு உண்டாயிற்று. அந் நாளில் மூத்தோன் வழியினனாகிய இரண்டாம் வீமன் மகன் இரண்டாம் அம்மராசன் (கி. பி. 945 - 970) அங்கு அரசாண்டு கொண்டிருந்தான். இளையோன் வழியினனாகிய இரண்டாம் யுத்த மல்லன் மகன் பாதபன் என்பவன் அவ்வாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற கருத்தினனாய் இராஷ்டி கூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவனது உதவி பெற்று, இரண்டாம் அம்மராசனைப் போரில் வென்று நாட்டைக் கவர்ந்துகொண்டு ஆட்சி புரிவானாயினன்'. அப்போது அம்மராசன் கலிங்க நாட்டிற்கு ஓடிவிட்டா டானென்று பாதபனுடைய ஆரும்பாகச் செப்பேடுகள் கூறுகின்றன". மூத்தோன் வழியினர்க்கும் இளையோன் வழியினர்க்கும் ம் நாட்டின் ஆட்சியுரிமை பற்றி அடிக்கடி போர்கள் நிகழ்ந் தமையால் கி. பி. 945-ஆம் ஆண்டு முதல் வேங்கி நாட்டில்

1. Ins. 515 of 1912.

2. S. I. I., Vol. II, p. 7.

3. Ep. Ind., Vol. XIX, p. 146. The Eastern Calukyas of Vengi by Dr. N. Venkataramanayya, p. 186.

4. Ep. Ind., Vol. XIX, No. 24.