உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

குழப்பமும் கலகமும் மிகுந்துகொண்டே வந்தன. பாத பனுடைய ஆட்சிக்குப் பிறகு அவன் தம்பி இரண்டாம் தாழன் முடி சூடி அரசாண்டான். குறுநில மன்னர்களும் அரசியல் அதிகாரிகளும் அவன்பால் பற்றின்றி முரண்பட்டிருத்தலை யுணர்ந்த அம்மராசன் தென்கலிங்க வேந்தனது துணை கொண்டு படை யெடுத்துத் தாழனைப் போரிற் கொன்று நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிவானாயினன். இளையோன் வழியினர் ஒருவருமின்றி தாழனொடு முடிவெய்தினர். கி. பி. 970-ல் அம்மராசனை அவன் மாற்றாந் தாயின் மகனாகிய தானார்ணவன் என்பான் வடகலிங்க மன்னன் உதவி கொண்டு போரிற் கொன்று தன் தமையன் ஆண்டு வந்த நாட்டைக் கைப்பற்றி கி. பி. 973 வரையில் ஆட்சி புரிந்தான்'. சி

தன் மைத்துனனாகிய அம்மராசனைக் கொன்று நாட்டைக் கவர்ந்துகொண்ட தானார்ணவன் செயலைக் கண்டு சீற்றங் கொண்ட தெலுங்கச் சோழனாகிய ஜடா சோடவீமன் என்பான் கி.பி.973-ல் வேங்கி நாட்டின் மேற்படையெடுத்துத் தானார்ணவனைக் கொன்று அந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சிபுரியத் தொடங்கினான். அப்பொழுது தானார்ணவன் மக்களாகிய சக்திவர்மனும் விமலாதித்தனும் வடகலிங்க நாட்டிற்கு ஓடி அங்குத் தங்கியிருந்தனர்.

அந்நாட்டு வேந்தனாகிய காமார்ணவனும் அவன் தம்பி விநயாதித்தனும் அவர்களை ஆதரித்தமை பற்றி அவர் களுடைய பகைஞனாகிய அத் தெலுங்க வீமனால் முறையே கி.பி. 978,981-ஆம் ஆண்டுகளிற் போரிற் கொல்லப்பட்டு நாட்டை யிழக்கும்படி நேர்ந்தது. கலிங்க நாடும் அவன் ஆட்சிக்குள்ளாயிற்று. அந்நாட்களில் கீழைச் சளுக்கிய அரச குமாரர் இருவரும் சோழ மண்டலத்தையடைந்து இராசராச சோழன்பால் அடைக்கலம் புகுந்து, தெலுங்க வீமன் கவர்ந்து கொண்ட தமது நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தனர்.

1. The Eastern Calukyas of Vengi by Dr. N. Venkataramanayya, pp. 193 and 202.

2. Ep. Ind., Vol. VI, pp 358 & 359.