உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

103

மூத்தோன் வழியினரின் செப்பேடுகள் எல்லாம் அவ் விருபத்தேழு ஆண்டுகளும் வேங்கி நாட்டில் குழப்பமும் கலகமும் மிகுந்திருந்த காலம் என்று கூறுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் தம் நாட்டையிழந்து ஓரிடத்தில் கரந்துறையும் வாழ்க்கையை மேற்கொள்ள நேர்ந்தமையால் அவர்களுடைய செப்பேடுகள் அவ்வாறு கூறுவதில் வியப்பொன்றுமில்லை.

இராசராச சோழன் அவர்கட்கு வேங்கி நாட்டை வென்று அளிப்பதற்கு முன்னர், சீட்புலிநாடு, பாகிநாடு என்பவற்றின் மேல் படையெடுத்து அவற்றைக் கைப்பற்றுவது இன்றியமை யாததாயிற்று. அந்நாடுகள், நெல்லூர் ஜில்லாவின் வட பகுதியிலிருந்தவை யாகும்'. முதற் பராந்தக சோழன் அவற்றைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்தியிருந்தான். அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நிகழ்ந்த இராஷ்டிரகூடர் படை யெடுப்பினால் சோழ மன்னர்கள் அவற்றை இழக்கும்படி நேர்ந்தது. இராசராச சோழன் அவற்றைக் கைப்பற்றும் பொருட்டு கி.பி. 991 ஆம் ஆண்டில் தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருகாடி யுடையான்' பரமன் மழபாடியானான மும்முடிச் சோழன் தலைமையில் ஒரு பெரும்படையை அனுப்பினான். அப்படை யெடுப்பின் பயனாக, சீட்புலி நாடும் பாகிநாடும் இராசராச சோழன் ஆட்சிக்குள்ளாயின. அப்போர் நிகழ்ச்சி திருவாலங் காட்டுச் செப்பேடுகளாலும் சக்திவர்மனது பற்றுச் செப்பேடுகளாலும் அறியப்படுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள இராசராசன் ஆட்சியின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் அச்செய்தியையுணர்த்துகின்றது'. அன்றியும், நெல்லூர் ஜில்லா விலுள்ள ரெட்டிபாளையத்தில் காணப்படும் இராசராசன் ஆட்சியின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று அந்நிலப்

1. Historical Sketches of Ancient Deccan, p. 247.

6

2. சித்தூர் ஜில்லா, மதனபள்ளி தாலுக்காவில் சிப்பிலி என்னும் ஊர் ஒன்று உளது. (Inscriptions of the Madras Py - Nellor 239).

3. Ins. 79 of 1921; S. I. I., Vol. XIII, Nos. 149 and 150.

4. S. I. I., Vol. III, No. 205, Verse 82.

5. Ins. 79 of 1921.

6. Nellore Inscriptions, p. 446.