உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

பரப்பு இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பதை நன்கு புலப்படுத்துகின்றது.

இராசராச சோழன் வேங்கி நாட்டிற்குத் தெற்கேயுள்ள சீட்புலி பாகி நாடுகளை வென்று கைப்பற்றிய பிறகு கீழைச் சளுக்கிய மன்னனாகிய சக்திவர்மனுக்கு அவன் நாட்டைப் பெறுமாறு உதவி புரிவது எளிதாயிற்று. ஆகவே கி. பி. 999 ஆம் ஆண்டில் இராசராசன் வேங்கி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று ஜடா சோட வீமனைப் போரில் வென்று சக்திவர்மனை வேங்கி நாட்டிற்கு வேந்தனாக முடி சூட்டினான்'. எனினும், தோல்வியுற்ற அவ்வீமன் கி. பி, 1001 -ல் கலிங்கப் படையின் துணைகொண்டு சக்திவர்மனை வென்று அவனைக் காஞ்சி வரையிலும் துரத்தி வந்தான். அந்நிலையில் இராசராசன் அவனைப் போரிற் கொன்று வேங்கி நாட்டைச் சக்தி வர்மனுக்குத் திரும்ப அளித்தனன். அதன் பிறகுதான் அந்நாடு கீழைச் சளுக்கியரது ஆட்சியில் நிலைபெறுவதாயிற்று. அன்றியும் சக்திவர்மனுக்குப் பிறகு அவன் தம்பி விமலாதித்தன் வேங்கி நாட்டிற்குப் பிறகு அரசனாக முடி சூட்டப்பெற வேண்டுமென்ற ஏற்பாடு இராசராசனால் செய்யப்பட்டது. உடனே அவ்விமலாதித்தன் இளவரசுப் பட்டமுங்கட்டப் பெற்றனன். இராசராச சோழன் அத்துணை ஆதரவையும் அன்பையும், அவ் விமலாதித்தன்பாற் காட்டியமைக்குக் காரணம் தன் புதல்வியாகிய குந்தவைப்பிராட்டியை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்திருந்தமையேயாம்'.

சக்திவர்மன் வேங்கி மண்டலத்தில் பன்னிருயாண்டுகள் ஆட்சிபுரிந்து கி. பி. 1011 ஆம் ஆண்டில் இறந்தான்'. பிறகு விமலாதித்தன் அந்நாட்டில்தான் முடிசூட்டப் பெற்று அரசாளுவா னாயினன்".

1. Historical Sketches of Ancient Deccan, p. 147.

2. Ibid

3. The Eastern Calukyas of Vengi, page 215.

4. Ep. Ind., Vol. VI, p, 349. இவ் விமலாதித்தன் திருவையாற்று உலோக மாதேவீச்சுரமுடைய மகாதேவர்க்கு 1148 கழஞ்சு எடையுள்ள 8 வெள்ளிக் கலசங்கள் கி. பி. 1041-ல் அளித்துள்ளமை அறியத்தக்கது. (S. I. I., Vol. V, No. 514)