உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

மன்னனாகிய விமலாதித்தனுக்கு அடிக்கடி டையூறு ழைத்துக்கொண்டு இருந்திருத்தல் கூடும்; அது பற்றி அவனை வென்றடக்கக் கருதி' இராசேந்திரன் கவிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்று அங்ஙனஞ் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இராசராச சோழனது போர்ச் செயல்களுள் இறுதியில் நிகழ்ந்தது இவன் முந்நீர்ப்பழந் தீவு பன்னீராயிரமும் கைப் பற்றும் பொருட்டு படையெடுத்தமையேயாம். பழந்தீவு பன்னீராயிரம் என்பது சேர நாட்டிற்குத் தென்மேற்கே அரபிக் கடலிலுள்ள மால் தீவுகளைக் குறிக்கும் பழைய பெயராகும். 'கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்' என்னும் அகத்தியச் சூத்திரத்தினாலும்', 'குமரி யாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும்' என்னும் தெய்வச்சிலையாரது தொல்காப்பியச் சொல்லதிகார உரைப் பகுதியினாலும்', பண்டைக் காலத்தில் குமரியாற்றிற்குத் தெற்கே கடலில் பழந்தீவுகள் இருந்தமை இனிது புலனாகும். எனவே அவை சேர நாட்டிற்குத் தென் மேற்கே அண்மையில் இருந்தமையின் அத் தீவுகளிலிருந்த மக்களால் சேர நாட்டினர்க்கு அடிக்கடி இன்னல்கள் நேர்ந்தி ருக்கலாம். சேர நாடு இராசராச சோழன் ஆட்சிக்குட்பட்டி ருந்தமையால் அந்நாட்டு மக்களின் துன்பங்களை ஒழிப்பதும் இவ் வேந்தனது கடமைகளுள் ஒன்றேயாம். அது பற்றியே இவன் பழந்தீவுகளின் மேல் படையெடுத்து அவற்றைக் கைப் பற்றி யிருத்தல் வேண்டும். அப் படையெழுச்சியைப் பற்றிய 1. கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தன் இராசேந்திரனுடைய தங்கையின் கணவனாதலின் அவனுக்கு உற்றுழியுதவுவது இவன் கடமையாயிற்று.

2. 'கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம்

கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும்

எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்

கலிங்கம் தெலுங்கம் கொங்கணந் துளுவம்

குடகங் குன்றகம் என்பன குடபால்

இறுபுறச் சையத்துடனுறைபு கூருந்

தமிழ் திரிநிலங்களும்'

(தொல். சொல். தெய்வச்சிலையார் உரை, பக். 218 - 219)

3. 'பன்னிரு நிலமாவன - குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும், கொல்லமும் கூபமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்ற முகம் கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.' (மேற்படி உரை, பக். 219).