உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

115

மண்டலத்தை மாகாணமாகவும் கொள்ளலாம். எனவே, நம் சென்னை நாடு ஜில்லாக்களின்றித் தாலூகாக்களை மாத்திரம் உடையதாயிருக்குமாயின் எவ்வாறிருக்குமோ, அவ்வாறே சோழ மண்டலமும் இராசராசன் ஆட்சிக்குமுன் பல நாடுகளைத் தன்னகத்துக்கொண்டு விளங்கியது. இவ்வேந்தனே தன் ஆட்சி நன்கு நடைபெற வேண்டி, சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்பாற்கொண்ட வளநாடு என்னும் ஓர் உட்பிரிவை ஒவ்வொரு மண்டலத்திலும் அமைத்தனன். அச்செயல் இவன் அரசியல்நுட்பங் களை இயல்பாகவே உணர்ந்தவன் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்துவதாகும். இவனது ஆணையின்படி சோழ மண்டலம் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில் மாத்திரம் முன்னேயிருந்த இருபத்து நான்கு கோட்டங்களும் இருபத்து நான்கு வளநாடுகளாக மாற்றப் பெற்றன. இராசராச சோழன் ஆட்சியின் 17-ஆம் ஆண்டு முதல் தான் ஊர்களையும் நகரங்களையும் குறிக்குமிடத்து அவை அமைந்த நாட்டைக் கூறுவதோடு நில்லாமல் அந்நாடு அமைந் துள்ள வள நாட்டையும்' ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது என்பது ஈண்டு அறியத்தக்கது.

இராசராசனுடைய அமைச்சர்களும் நாட்டதிகாரிகளும் அறநிலையங்களைப் பாதுகாத்துக் கண்காணிப்போரும் அறங் கூறவையத்தாரும் பிற அரசியல் அதிகாரிகளும் ஊர்ச்சபை ம் யாரும் தத்தம் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றி வந்தமையால் இவன் ஆட்சியில் குடிகள் எல்லோரும் இனிது வாழ்ந்து கொண்டிருந்தனர். பயிற்சி பெற்ற சிறந்த தரைப்படைகளும் கடற்படைகளும் இவ்வேந்தன்பால் மிகுதியாக ருந்தமை யோடு அவற்றை நடத்தற்குத் தகுதியும் ஆற்றலும் வாய்ந்த பல படைத்தலைவர்களும் இருந்தனர். ஆதலால், சோழ இராச்சியத்தில் பிற வேந்தர் படையெழுச்சி இவன் ஆட்சிக் காலத்தில் நிகழவே இல்லை. ஆகவே, இவன் இராச்சியத்திலிருந்த மக்கள் எல்லோரும் பகையரசர்களால் ஏற்படும் படை யெழுச்சி முதலான எத்தகைய இன்னல்களுமின்றி இன்புற்று வாழ்ந்துவந்தனர் என்பது தேற்றம்.

1. சோழ மண்டலத்து க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திரு நறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி' என்னுங் கல்வெட்டுப்பகுதியில் மண்டலம், வளநாடு, நாடு என்பன முறைப்படி குறிக்கப்பட்டிருத்தல் காண்க.