உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

னி, தஞ்சைமாநகரில் ராசராசன் எடுப்பித்த திருக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்தவர்களுள் இவன் மனைவிமார்களும் காணப்படுகின்றனர். அச்செய்திகளை யுணர்த்துங் கல்வெட்டுக்களை ஆராயுங்கால் இவனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பது புலனாகின்றது. அவர்களுள் பட்டத்தரசியாக விளங்கியவள் உலோகமாதேவியாவாள். அவளுக்குத் தந்தி சக்தி விடங்கி என்னும் வேறொரு பெயரும் உண்டு. அவ் வம்மையே இம்மன்னன் வாழ்நாள் முழுமையும் பட்டத்தரசியாக இருந்தனள் என்பது இவன் தன் ஆட்சியின் 29-ஆம் ஆண்டில் திருவியலூர்க் கோயிலில் துலாபாரம் புகுந்த போது அவ் வரசியும் இரணியகருப்பம் புகுந்துள்ளமையால் தெள்ளிதின் உணரப்படும். அம்முதற் பெருந் தேவி தஞ்சை மாநகர்க்கு வடக்கேயுள்ள திருவையாற்றில் ஐயாறப்பரது கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உலோகமாதே வீச்சுரம் என்னும் கோயில் ஒன்று எடுப்பித்து அதன் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்துள்ளனள்'. அஃது இந்நாளில் உத்தர கைலாயம் என்று வழங்குகின்றது. அச்செயலால் உலோக மாதேவியும் தன் கணவனைப்போல் சிவபக்தி யுடையவளாகத் திகழ்ந்தனள் என்பது புலப்படுதல் காண்க.

இராசராச சோழனுடைய மற்ற மனைவிமார்கள், சோழ மாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, இலாடமாதேவி, பிருதிவிமாதேவி', மீனவன்மாதேவி, 1. 'உடையார் சீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான ஸ்ரீ ஒலோக மாதேவியார் வடகரை இராசேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றுப் பால் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதேவீஸ்வரம் உடைய மகாதேவர்க்கும் ஒலோகவிடங்க தேவருள்ளிட்ட திருமேனிகளுக்கும் செய்வித்த பொற்கொள்கை முதலிய உள்ள திருவாபரணங்களும் திருப்பரி கலங்களும் கல்லிலே வெட்டுவிக்க என்று, - S. I. I., Vol. V, No. 521.'

2.S. I. I., Vol. III, No. 42 and 46.

3. Ibid, No. 48.

4. Ibid, Nos. 51 and 53.

5. Ibid, No. 44.

6. Ibid, pp. 467 and 472.

7. Ibid, Nos. 80 and 82.

8. Ins. 301 of 1908.