உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் -1

117

வீரநாராயணி', வில்லவன் மாதேவி', வானவன் மாதேவி என்போர். அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவன மாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவ்வரசியே இராசேந்திர சோழனைத் தன் மகனாகப் பெற்ற பெருமை யுடயவள் என்பது உணரற்பாலது". பஞ்சவன்மாதேவி என்பாள் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவில் மழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த சேரர் குலக் குறுநில மன்னனாகிய பழு வேட்டரையன் மகள் ஆவள். இராச ராசனுக்குப் பெரு வீரனாகிய இராசேந்திரன் ஒரே புதல்வன் ஆவன். வேறு புதல்வர் இலர். ஆனால், பெண் மக்கள் இருவர் இருந்தனர்". அவர்களுள், மூத்த பெண் மாதேவடிகள் என்னும் பெயரினள். இளைய பெண் இரண்டாம் குந்தவையாவள். அவள், கீழைச்சாளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கு மணஞ் செய்து கொடுக்கப்பெற்றனள். அவ்விருவர்களுக்குப் பிறந்த புதல்வனே முதற் குலோத்துங்கன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் என்பது அறியற்பாலதாகும்.

இராசராசன் தமக்கைக்கும் ளைய புதல்விக்கும் குந்தவை என்னும் பெயர் இருத்தலால் வேறுபாடு உணர்தற் பொருட்டு இவன் தமக்கையைப் பெரிய குந்தவை என்று வழங்கியுள்ளனர். அவ்வம்மை வல்லவரையர் வந்திய தேவரை

1.S. I. I., Vol. V, No.975.

2. Ibid, No. 981.

3. Ibid, No. 982.

4. Ibid,

page 368.

5. திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டில் மாதேவடிகள் 'நடுவிற்பெண்' எனவும் ‘நடுவிற்பிள்ளை' எனவும் குறிப்பிடப் பட்டிருத்தலால் இராசராசனுக்கு மூன்று பெண்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சி யாளர்களின் கொள்கை (கூாந உடிடயள, ஏடிட, ஐ. யீ. 226) நடுவிற் பிள்ளை என்ற தொடர் மூத்த பிள்ளையாகிய இராசேந் திரனுக்கும் இளைய பிள்ளையாகிய குந்தவைக்கும் நடுவிற் பிறந்த பிள்ளை என்ற பொருளைத் தரும் அளவில் அமைந்துள்ளது. இத்தொடருக்கேற்பவே நடுவிற் பெண் என்ற தொடர்க்கும் பொருள் கொள்ளவேண்டும். ஆதலால் இத்தொடரை ஆதாரமாகக் கொண்டு இராச ராசனுக்கு மூன்று பெண்கள் இருந்தனர் என்று கொள்வது பொருந்தா தென்க. இனி, திருவையாற்று உலோகமாதேவீச்சுரத்திலுள்ள கல்வெட்டொன்றில் குறிப்பிட்டுள்ள இராசராசன் மகளாகிய சந்திரமல்லி என்பாள் மேலே சொல்லப்பட்ட மாதேவடிகள் என்னும் பெண்ணேயாவள். சந்திரமல்லி என்பது சந்திரமௌலி என்பதின் மரூஉவாகும். இதன் பரியாய நாமமே மாதேவ அடிகள் என்பது ஈண்டு உணரத்தக்கது.